Advertisment

விமர்சனம் : நெடுநல்வடை

/idhalgal/cinikkuttu/netunalvadai

நெல்லை வட்டார பேச்சு மொழியை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. "நீ என்னலே சொல்லுத', போடி கோட்டிக்காரி'- இதுதான் அதிக பட்சமாக அந்தப் படங்களில் பேசப்படும் நெல்லை டயலாக்.

Advertisment

ஆனால், இப்போது ரிலீசாகியிருக்கும் "நெடுநல்வாடை'-யோ முழுக்கமுழுக்க நெல்லை மண்ணின் வாசத்

நெல்லை வட்டார பேச்சு மொழியை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. "நீ என்னலே சொல்லுத', போடி கோட்டிக்காரி'- இதுதான் அதிக பட்சமாக அந்தப் படங்களில் பேசப்படும் நெல்லை டயலாக்.

Advertisment

ஆனால், இப்போது ரிலீசாகியிருக்கும் "நெடுநல்வாடை'-யோ முழுக்கமுழுக்க நெல்லை மண்ணின் வாசத்தையும் வசனத்தையும் நம் மனசுக்குள் ஆழமாய் இறக்கிவிடுகிறது.

Advertisment

nedunel

மகள் வயிற்றுப் பேரனையும் தாத்தாவையும் இணைக்கும் பாசக் கயிற்றின் இறுக்கத்தை பாசாங்கு இல்லாமல் சொல்லியிருக்கிறார் டைரக்டர் செல்வ கண்ணன். அதேபோல் பெண் களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதையும், கம்யூனிஸ்டுகள் என்றாலே கடுகடுப்பாகும் கார்ப்பரேட் கம்பெனிகளைப் பற்றியும் பட்டவர்த்தனமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

தாத்தாவாக வரும் "பூ' ராமுதான் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, அச்சுஅசல் கிராமத்துப் பெண்ணாக நம் கண்முன் பரவசம் காட்டுகிறார் ஹீரோயின் அஞ்சலி நாயர்.

சமீபத்தில் வந்த ஹீரோயின் களில் நடிக்கத் தெரிந்த ஹீரோயின் அஞ்சலிநாயர்தான். கதையில் கவனம் வைத்தால், இதே நடிப்பைத் தொடர்ந்தால், அஞ்சலிநாயர் காட்டில் மார்க்கெட் மழைதான். ஹீரோ இளங்கோவும் குறைவைக்காமல் நடித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்ளின். கேமராமேன் வினோத் ரத்தினசாமியும், எடிட்டர் காசிவிஸ்வநாதனும் டைரக்டருக்கு பக்க சப்போர்ட் டாக இருக்கிறார்கள்.

கடந்த இருபது ஆண்டு களில் வெளியான கிராமி யப் படங்களில் "நெடுநல்வாடை' தான் சிறந்த படம்.

வெல்டன் செல்வகண்ணன். கீப் இட் அப்!

cine260319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe