நயன்தாராவின் இளம் வில்லன்!

/idhalgal/cinikkuttu/nayantharas-young-villain

ரௌத்திரம் மிக்க இளைஞனாக "அஞ்சாதே', ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக "இரவுக்கு ஆயிரம் கண்கள்' என தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், வித்தியாசமான நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக் கும் நடிகராக விளங்கிவருகிறார் அ

ரௌத்திரம் மிக்க இளைஞனாக "அஞ்சாதே', ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக "இரவுக்கு ஆயிரம் கண்கள்' என தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், வித்தியாசமான நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக் கும் நடிகராக விளங்கிவருகிறார் அஜ்மல். தற்போது இவர் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் "நெற்றிக் கண்' படத்தில் மிக முக்கியமாக கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

nn

தற்போது வரை "நெற்றிக்கண்' படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக் கிறது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்கு கிறார். கிரிஷ் இசை யமைக்க, ஆர்.டி. ராஜாசேகர் ஒளிப் பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பு- லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம்- கமலநாதன், சண்டைப்பயிற்சி இயக்கம்- திலீப் சுப்பராயன், ஒலி வடிவமைப்பு- விஜய் ரத்தினம், ஒலிப்பதிவு- ஏ.எம். ரஹ்மத்துல்லா, இணைத் தயாரிப்பு- கே.எஸ். மயில்வாகனன், தயாரிப்பு மேலாண்மை- வி.கே. குபேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை- ஜி. முருக பூபதி, எம். மணிகண்டன்.

cini310320
இதையும் படியுங்கள்
Subscribe