நயன்தாரா கடுப்பு, காயத்ரி ஜிலிர்ப்பு, விஜய்சேதுபதி விழிப்பு!

/idhalgal/cinikkuttu/nayanthara-neck-gayatri-jilirupa-vijayseedupathi-awakening

னக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள "மூக்குத்தி அம்மன்' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துமுடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குத் தயாராக இருப்பதால் செம ஹேப்பியாக இருக்கிறார் நயன்தாரா. ரஜினியின் "தர்பார்' ஷூட்டிங் முடிவடையப்போகும் நேரத்தில், லைக்கா அதிபர் சுபாஷ் கரண் அல்லிராஜாவுடன் தகராறு செய்ததாக கொளுத்திப்போட்டார் டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ். இதனால், முருகதாஸ்மீதுள்ள கடுப்பால், விஜய்யின் "பிகில்' படத்திலும், ரஜினியின் "தர்பார்' படத்திலும் தன்னை வேஸ்டாக்கி விட்டதாக, வேண்டுமென்றே முருகதாஸின் நட்பு வட்டாரத் திலேயே கடுகடுவென வெடித் தாராம் நயன். தனது லவ்வர் விக்னேஷ் சிவனை வைத்து படம் தயாரிப் பதாகச

னக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள "மூக்குத்தி அம்மன்' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துமுடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குத் தயாராக இருப்பதால் செம ஹேப்பியாக இருக்கிறார் நயன்தாரா. ரஜினியின் "தர்பார்' ஷூட்டிங் முடிவடையப்போகும் நேரத்தில், லைக்கா அதிபர் சுபாஷ் கரண் அல்லிராஜாவுடன் தகராறு செய்ததாக கொளுத்திப்போட்டார் டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ். இதனால், முருகதாஸ்மீதுள்ள கடுப்பால், விஜய்யின் "பிகில்' படத்திலும், ரஜினியின் "தர்பார்' படத்திலும் தன்னை வேஸ்டாக்கி விட்டதாக, வேண்டுமென்றே முருகதாஸின் நட்பு வட்டாரத் திலேயே கடுகடுவென வெடித் தாராம் நயன். தனது லவ்வர் விக்னேஷ் சிவனை வைத்து படம் தயாரிப் பதாகச் சொன்ன லைக்கா சுபாஷ் கரண் டேக்கா கொடுத்துவிட்டதால், அவர்மீதும் செம கடுப்பில் இருக்காராம் நயன்.

nayan

குடும்ப குத்துவிளக்காக இருந்தால் வேலைக்கு ஆகாது, வருமானத்திற்கும் வழி இருக்காது என நினைத்து கவர்ச்சிக் களத்தில் குதிக்க முடிவு செய்துவிட்டார்களாம் காயத்ரி, தன்ஷிகா, தான்யா ரவிச்சந்திரன், அனு இமானுவேல் மற்றும் "பிக்பாஸ்' புகழ் லாஸ்லியா ஆகியோர். கைவசம் கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்டும், பி.ஆர்.ஓ.க் களும் இருப்பதால், பியூட் & ஹாட்டாக ஸ்டில்ஸ்களை ரிலீஸ் பண்ணிவருகிறார்கள். சமீபத்தில் ரிலீசான "பக்ரீத்' படத்திலும், அடுத்து வரப்போகும் "வாழ்க விவசாயி' படத்திலும் நடுத்தரவர்க்க குடும்பத்தலைவியாக நடித்ததால், சேலை கட்டிய ஹோம்லி லுக் ஸ்டில்களை இப்போதைக்கு ரிலீஸ் பண்ணி யிருக்கும் வசுந்தராவின் அதிரடி கவர்ச்சி ஸ்டில்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகலாம்.

gg

தே கூட்டணி! மெகா ஹிட்டடித்த படமான- ஏ-1 கூட்டணி யான சந்தானம், டைரக்டர் ஜான்சன். கே., சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணியில் ஒளிப்பதி வாளராக ஆர்தர் கே. வில்சன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. லார்க் ஸ்டுடியோ பேனரில் கே. குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

25,000/- டைரக்டர்கள் ஆர். சுந்தர் ராஜன், மனோபாலா, சிங்கம்புலி மற்றும் காமெடி நடிகர் சிங்க முத்து ஆகியோருக்கு தினசரி சம்பளம் ரூ.25 ஆயிரமாம்.

bb

லட்டிக்கல சாதி ஆணவக் கொலைக்கு ஆதரவாக எடுத்துள்ள "திரௌபதி' படத்தின் டீசர் வெளியானபோதே எதிர்ப்புக் கிளம்பி, போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்குப் போனது. படத்தின் டைரக்டர் ஜி. மோகனும் வன்னியர்; படத்தில் நடித்துள்ள, பணியாற்றியுள்ள அனைவருமே வன்னியர் என்பதால், வன்னியர் இனமக்கள் மட்டும் பார்த்தாலே போதும்; போட்ட காசை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் "திரௌபதி' குழு. ஆனால் பா.ம.க. தலைவரான டாக்டர் ராமதாசும், இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாசும் இப்படத் தினைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம்.

vv

"மண்டி' ஆன்லைன் விளம்பரப் படத்தில் நடித்தபின் ரிலீசானது விஜய் சேதுபதியின் "சங்கத் தமிழன்'. படமோ பப்படமாகி விட்டதால், இனிமேல் மல்டி பிராண்ட் விளம்பரங் களிலோ, ஆன்லைன் விளம்பரங்களிலோ நடிப் பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய் சேதுபதி.

pp

"ப.ப.ப.' பத்ரி டைரக்ஷனில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்திற்கு வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்கான "ப்ளான் பண்ணி பண்ணனும்' என்ற டயலாக்கையே டைட்டிலாக வைத்துள்ளனர். சென்னை, கேரளா வின் இடுக்கி, சீனாவில் கேங்டாக், குபூஃப் ஆகிய லொக்கேஷன்களில் ஷுட்டிங் நடந்து முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன. ராஜேஷ்குமார், க.சிந்தன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா, நடனம் கல்யாண், ஸ்டண்ட் ஷாம்.

cini040220
இதையும் படியுங்கள்
Subscribe