தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பதாலோ ஏனோ, தான் நடிக்கும் படங்கள் உள்ளிட்ட எந்த புரமோஷன் விழாக்களிலும் நயன்தாராவைப் பார்க்கமுடியாது. எத்தனையோ பெரிய முகங்கள் நேரடியாக இதைச் சொல்லி விமர்சித்தும்கூட, நயன் தனது பாலிசியை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பதாலோ ஏனோ, தான் நடிக்கும் படங்கள் உள்ளிட்ட எந்த புரமோஷன் விழாக்களிலும் நயன்தாராவைப் பார்க்கமுடியாது. எத்தனையோ பெரிய முகங்கள் நேரடியாக இதைச் சொல்லி விமர்சித்தும்கூட, நயன் தனது பாலிசியை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்தவிழாவில் அதுமாறி இருக்கிறது. வருமான வரித்துறையும், சமூகசேவை அமைப்புகளும் சேர்ந்து நடத்திய மகளிர் தின விழாவுக்காகத்தான் நயன் தனது பாலிசியை மாற்றியிருக்கிறார்.
உலக மகளிர் தினமான மார்ச் 8-ல் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி, எத்திராஜ் மற்றும் கல்லூரிச் சாலை வழியாக நுங்கம்பாக்கம் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக செல்வதுதான் விழாவின் சிறப்பு. இந்தப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைக்கவே, நயன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
சின்னச்சின்ன வெள்ளைப் புள்ளிகள் நிரம்பிய கறுப்பு நிற சூட் அணிந்து விழாவிற்கு நயன் வந்திருந்தார். அவரது வருகையால் இயல்பைவிடவும் கூட்டத்தில் அன்று உற்சாக அலைமோதியது. மகளிர் தினத்தின் முக்கியத்துவம் அறிந்து பலரும் அதைப் பற்றிப் பேசுகின்றனர். பல நடிகைகள் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில், தனது பாலிசியை மாற்றிக் கொண்டு நயன் வந்ததைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
"மூக்குத்தி அம்மன்', "அண்ணாத்த' மற்றும் நயனின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் "காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.