சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், அறிவழகன் டைரக்ஷனில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம், இப்போது பெரும் எதிர்பார்பில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் "கோலமாவு கோகிலா', "அறம்-2' என செம பிஸியாகவும் பரபரப்பாகவும் nayantharaஇருக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி என மெகா ஸ்டார் கூட்டணியில் தயாராகிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் படத்திலும் நயன் இருக்கிறார். இந்த மெகா கூட்டணி இருப்பதால், 150 கோடி ரூபாய்க்கு படம் விற்பனை ஆகியுள்ளது.

Advertisment

ஆனால் சில தமிழ் ஊடகங்களோ நயன்தாரா படம் இத்தனை கோடிக்கு விற்பனையாகியிருக்குன்னு அள்ளிவிட்டது. இது எல்லாமே நயனின் ஏற்பாடுதானாம்.

தமிழிலிலும் தெலுங்கிலும் பிஸியாக இருந்தாலும் தனது தாய் மொழியான மலையாளத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டால்தான், வினேஷ் சிவனை கல்யாணம் பண்ணிய பிறகும் வீரியமாக வெற்றிநடை போடலாம் என கணக்குப் போட்டு கச்சிதமாக காய் நகர்த்துகிறார் நயன்.kathirin

ஏன்னா கல்யாணம் ஆகிருச்சுன்னா, தமிழ்க்கார டைரக்டர்ஸ் அம்புட்டுப் பேரும் அக்கா, அண்ணி வேஷத்துக்குத்தான் கூப்பிடுவார்கள் என்ற உஷார்த்தனத்துடன் இருக்கிறார் நயன்.

Advertisment

பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீனிவாசனின் மகன் தியான் டைரக்ஷனில் லவ்- ஆக்ஷன் - டிராமா என்ற படம் ஆரம்பமாகவுள்ளது. இதில் ஹீரோ நிவின்பாலிக்கு ஜோடி போடுகிறார் நயன்தாரா. மலையாளம் கலந்து தமிழ் பேசும் ஐயர் ஆத்துப் பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. இதற்கடுத்து மம்முட்டி, மோகன்லால், திலீப் ஆகியோருடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நயன். "நேக்கு கல்யாண வயசு வந்துடுத்து' என ட்விட்டியிருந்தார் நயனின் லவ்வர் விக்னேஷ் சிவன். வருங்கால ஆத்துக்காரர் மனச தெரிஞ்சுக்கிட்டுதான் ஐயர் ஆத்துப் பொண்ணா நடிக்கிறாரோ நயன்.

நயன் முன்னாடி போனா நான் பின்னாடியே வர்றேன் என சபதம் எடுத்து மலையாள ஃபீல்டுக்குள் போகிறார் கேத்ரின் தெரசா. சில வருடங்களுக்குமுன்பு பிரித்விராஜுக்கு ஜோடிபோட்ட பின், லேட்டஸ்ட்டாக இப்போது ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக மல்லுவுட்டில் என்ட்ரியாகி யிருக்கிறார். "ஆணெங்கிலும் அல்லெங்கிலும்' என்ற அந்தப் படத்தில் பிளேபாயாக ஃபஹத்தும் கிராமத்துப் பெண்ணாக கேத்ரினும் வேஷம் போடுகிறார்கள்.