Advertisment

சிம்புவுக்கு ஆப்பு வைத்த நயன்தாரா!

/idhalgal/cinikkuttu/nayantara-put-wedge-simbu

லைக்கா புரொடக்ஷன் தயாரித்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது நயன்தாராவின் "கோலமாவு கோகிலா.'

Advertisment

nayanthara

அடுத்தடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவரும் நயன், தனது வருங்கால கணவரும் இப்போதைய லவ்வருமான விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் "விசுவாசம்' படத்தில் அஜீத்துக்கு ஜோடி போட சம்மதித்துள்ளார். அஜீத் கால்ஷீட் கொட

லைக்கா புரொடக்ஷன் தயாரித்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது நயன்தாராவின் "கோலமாவு கோகிலா.'

Advertisment

nayanthara

அடுத்தடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவரும் நயன், தனது வருங்கால கணவரும் இப்போதைய லவ்வருமான விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் "விசுவாசம்' படத்தில் அஜீத்துக்கு ஜோடி போட சம்மதித்துள்ளார். அஜீத் கால்ஷீட் கொடுப்பாரா, கைகழுவி விடுவாராங்கிறது அப்புறம்.

Advertisment

இப்ப "கோலமாவு கோகிலா' கதைக்கு வருவோம். சிம்பு- தமன்னா காம்பினேஷனில் "வேட்டை மன்னன்' படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் நெல்சன். 15 நாட்கள் துபாயில் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், வழக்கம்போல் சிம்பு முருங்கை மரம் ஏறினார்.

simbu

பணம் போட்ட தயாரிப்பாளர், லோலோன்னு அலஞ்சு பேச்சு வார்த்தை நடத்தியும் மசியவில்லை சிம்பு. இப்ப அந்தத் தயாரிப்பாளரின் நிலை என்னாச்சுன்னு யாருக்கும் தெரியல.

ஆனா டைரக்டர் நெல்சனின் நிலைமைதான் கவலைக் கிடமானது. தனது வாழ்க்கைப் பிரச்சனையாச்சேன்னு, தனிப்பட்ட முறையில் சிம்புவிடம் கெஞ்சிப் பார்த்தும் மனம் இரங்காத சிம்பு, ஒட்டுமொத்தமாக இரங்கல்பா பாடிவிட்டார். கொஞ்ச நாள் பேதலிலித்த நிலையில் இருந்த நெல்சன், ஒருவழியாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு, நயன்தாராவிடம் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையுடன் சிம்புவால் நொந்த கதையையும் நெல்சன் சொல்லிலியதும் கண்கலங்கினார் நயன்தாரா.

""இன்னும் திருந்த லையா அந்த ஜென்மம்.? திருந்தாத அந்த ஜென்மத்த நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க. நான் கால்ஷீட் தரேன், லைக்காவிடம் பேசுறேன், சீக்கிரமே படத்தை ஆரம்பிச்சுரலாம், சந்தோஷமா வீட்டுக்குப் போங்க'' என ஆறுதல் கூறினா ராம் நயன்தாரா.

nayanthara

மகிழ்ச்சியான நெல்சன், ""மேடம் "கோலமாவு கோகிலா'-ங்கிற டைட்டில் கொஞ்சம் லோவா இருக்கு. நீங்க ஹீரோ யின்றதால டைட்டிலை மாத்திக்கிருவோம்'' என்றிருக்கிறார். ஆனா நயனோ, ""வேணாம் வேணாம். இந்தக் கீழ்த்தரமான டைட்டிலைப் பார்த்து, அந்தக் கீழ்த்தரமான ஜென்மம் வயிறு எரியட்டும் விடுங்க'' என உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அடி ஆத்தீ... "கோலமாவு கோகிலா'-வுக்குள்ள இம்புட்டு சங்கதி இருக்கா?

-பரமு

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe