Advertisment

நாசர்தான் எனது குரு - சேத்தன் பெருமிதம்!

/idhalgal/cinikkuttu/nasser-my-guru-chetan-proud

டர்த்தியான பாத்திரங்கள்ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருப்பவர் நடிகர் சேத்தன்.

Advertisment

"மர்மதேசம்' தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம்முதல் தூந்திரப் பிரதேசம்வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார். "தாம் தூம்' படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 50 படங்கள் முட

டர்த்தியான பாத்திரங்கள்ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருப்பவர் நடிகர் சேத்தன்.

Advertisment

"மர்மதேசம்' தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம்முதல் தூந்திரப் பிரதேசம்வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார். "தாம் தூம்' படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார். இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது.

sethan

இதோ அவரே பேசுகிறார்.

""நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார்தான். அந்தப் படம் "தாம் தூம்.' அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து "உங்களுக்கு காமெடி நல்லா வரும்போல இருக்கே?' என்றார். "ஆமாம் சார்.

அப்புறம் ஏன் சார் என்னை சீரிய சாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள்?' என்றேன். "அதுக்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. "மர்மதேசம்' தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது' என்றார். அந்தளவுக்கு "மர்ம தேசம்' தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப் படையில் எனக்கு நகைச்சுவை யுணர்வு அதிகமுண்டு. ஆனால் யாரும் இதை நம்பமாட்டேன் என்கிறார்கள்.

நான் முத லில் ஒப்பந்த மான படம் "தாம் தூம்' என்றாலும், முதலில் வெளி யான படம் "பொல்லாதவன்.' அதன்பிறகு நிறைய படங்கள்.

நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்படவைத்த படம் Revelations. இது 2016-ல் வெளிவந்தது. இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர் களில் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டு களைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன். எனக்கு பாசிடிவ், நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத் தில் எனக்கு நாசர் சார்தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்'' என்கிறார்.

இவரது மனைவி தேவதர்ஷினி, மகள் ("96') என எல்லாருமே சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடிக்கிறார்கள்.

சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் "கென்னடி கிளப்' படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி. குமார் தயாரிப் பில் இரண்டு படங்கள் உள்பட ஐந்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.

cine190219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe