"மேல்நாட்டு மருமகன்' ரிலீசுக்குப் பிறகு செம ஹேப்பியாக இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது...

Advertisment

""இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு "சஹானா' என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து கே.பி. சாரின் டைரக்ஷன் மற்றும் டைரக்ஷன் மேற்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்.

Advertisment

rajkamalதொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால்பதிக்க முடியாதே என்று, பிரபல இயக்குநர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்.

குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குநர் எம்.எஸ்.எஸ். அவர்களுக்குப் பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் "மேல்நாட்டு மருமகன்' திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்.

Advertisment

ஆனால் பொருளாதாரரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த "மேல்நாட்டு மருமகன்' திரையிடுவதில் தாமதமானது.

அந்த இடைவெளியில் "மேல்நாட்டு மருமகன்' படத்தின் போட்டோஸ் பார்த்து "சண்டிக்குதிரை' என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது.

இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நல்லாவருவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.