புனே செல்வதற்காக அக்டோபர் 9-ஆம் தேதி காலை சென்னை விமான நிலையம் சென்றார் நமது நக்கீரன் ஆசிரியர் கோபால்.

Advertisment

பாத்ரூம் போனவரை வழிமறித்து அடாவடியாகக் கைதுசெய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியது சென்னை போலீஸ்.

Advertisment

nakkheerangopal

அதன்பின் திருவல்லிலிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை நடத்திவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கும் அல்லிலிகுளம் வளாகத்தில் இயங்கும் எழும்பூர் 13-ஆவது மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

nakkheerangopalநக்கீரன் ஆசிரியர்மீது போடப் பட்ட 124-ஆவது சட்டப் பிரிவு செல்லாது. எனவே அவரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்ததும் மாலை 4.30 மணியளவில் விடுதலை ஆனார் ஆசிரியர்.

Advertisment

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கட்டளையால் காவல்துறை முகத்தில் டன் கணக்கில் கரி.

நக்கீரன் ஆசிரியர் கைதை கண்டித்து தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA)வெளியிட்ட கண்டன அறிக்கையில், ""மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியது. என்ன காரணம் என்றே சொல்லாமல் கைது செய்து விட்டு, பின்னர் ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதிவது என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். பேச்சுரிமை, எழுத்து ரிமை, கருத்துரிமையை அடியோடு நசுக்கும் செயல் இது. சமீபகாலத்தில் அரசை விமர்சித்தோ உண்மையான செய்தி களை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீதோ தமிழக அரசு அடக்குமுறையை ஏவுவதும், பொய் வழக்கு போடுவதும் அதிகமாகி வருகிறது. ஆனால் நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறு பேசியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லாததும் கண்டனத் துக்குரியது.'' என்று சங்கத்தின் தலைவர் எஸ்.கவிதா, செயலாளர் ஆபிரகாம் (எ) கோடங்கி, பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.