Advertisment

எனக்கும் விஜய்சேதுபதிக்கும் நெருக்கம்தான்!

/idhalgal/cinikkuttu/naanauma-vaijayacaetaupataipataikakauma-naeraukakamataana

"சீக்கிரமே தமிழில் நான் பாடுவேன்'' என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மடோனா செபஸ்டின்.

Advertisment

மலையாளத்தில் "பிரேமம்' என்ற படத்தில் ரொம்பவும் கியூட்டாக அறிமுக மாகி ஏராளமான இளைஞர்களின் மனதைக் கவ்வியவர் இவர். தமிழில் இவர் விஜய்சேதுபதியுடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். விஜய்சேதுபதிதான் தனக்கு நெருக்கமானவர் என்று கூற

"சீக்கிரமே தமிழில் நான் பாடுவேன்'' என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மடோனா செபஸ்டின்.

Advertisment

மலையாளத்தில் "பிரேமம்' என்ற படத்தில் ரொம்பவும் கியூட்டாக அறிமுக மாகி ஏராளமான இளைஞர்களின் மனதைக் கவ்வியவர் இவர். தமிழில் இவர் விஜய்சேதுபதியுடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். விஜய்சேதுபதிதான் தனக்கு நெருக்கமானவர் என்று கூறுகிறார்.

Advertisment

""நான் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று நினைப்பவள் இல்லை. செலக்டிவாக நடிக்கணும் என்று நினைக்கிறேன். அதனால்தான் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன். இப்போது கிச்சா சுதீப்புடன் கன்னடப் படத்தில் நடிக்கிறேன். அடுத்து கைவசம் ஒரு தெலுங்குப் படம் இருக்கிறது. அதைப்பற்றி சொல்லும் நிலையில் நான் இல்லை.

madona

"ஜுங்கா' படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாகவும் என்னால் நடிக்க முடியுமா என்றும் விஜய்சேதுபதி கேட்டார். நிச்சயமாக அது சுவாரஸ்யமான கேரக்டராக இருக்கும் என்று நினைத்தேன்.

நினைத்ததுபோலவே அமைந்தது. எனது பெர்ஷனல் லைப்புக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறேன்.

ஆறு வயதில் பாட ஆரம்பித் தேன். விரைவிலேயே நான் தமிழில் பாடுவேன். "பிரேமம்' படத்தில் அனுபமாவும் சாய் பல்லவி யும் என்னுடன் நடித்தார்கள். இருவருமே இப்போது பல படங்களில் நடிக்கிறார்கள். அனுபமாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். சாய் பல்லவிக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து லூசுப் பொண்ணு மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதைத் தவிர்க்க விரும்புகிறேன். அதனால்தான் கதையை தேர்வு செய்ய நேரம் எடுக்கிறேன்.

அளவாய் சாப்பிடுவதால் உடல் எடை பற்றி கவலைப்படுவதில்லை. அதேசமயம், சப்பையாக இருப்பதில் எனக்கு ஆர்வமில்லை'' என்கிறார் மடோனா.

""எனக்கு பிடித்த ஹீரோயின் களில் காயத்ரிக்கு அடுத்த மடோனா செபஸ்டின்தான்'' என விஜய் சேதுபதியும் சொல்லிஇருந்தார் என்பதை "சினிக்கூத்து' வாசகர் களுக்கு நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

cine280818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe