Advertisment

இதுதான் எனது கடைசிப் படம்! -எஸ்.ஏ.சி. உருக்கம்!

/idhalgal/cinikkuttu/my-last-picture-sac

ஜெய்- அதுல்யா ரவி, வைபவி என இளமைப் பட்டாளத் தின் துணையுடன் "கேப்மாரி' படத்தை எடுத்து முடித்திருக் கிறார் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 27-ஆம் தேதி நடந்தது.

Advertisment

sac

அப்போது ஹீரோ ஜெய் பேசும் போது, ""இண்டஸ்ட்ரியில் என்ன

ஜெய்- அதுல்யா ரவி, வைபவி என இளமைப் பட்டாளத் தின் துணையுடன் "கேப்மாரி' படத்தை எடுத்து முடித்திருக் கிறார் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 27-ஆம் தேதி நடந்தது.

Advertisment

sac

அப்போது ஹீரோ ஜெய் பேசும் போது, ""இண்டஸ்ட்ரியில் என்னைப் பத்தி தப்புத்தப்பாக பேசுகிறார்கள். "பார்ட்டிகளில் கலந்துகிட்டு அலப்பறை பண்றான், கரெக்டான டயத்துக்கு ஷூட்டிங்கிற்கு வரமாட்டான் அப்படி இப்படி'ன்னு பேசுகிறார்கள். இதோ இங்க இருக்கும் எஸ்.ஏ.சி. சாரிடம் கேட்டுப் பாருங்க. ஒன்பது மணிக்கு ஷூட்டிங்குன்னா எட்டே முக்கால் மணிக்கே போயிருவேன். இந்தப் படமே என்னைப் பத்தியதுதான். டைரக்டர் என்னை ஃபாலோ பண்ணி கதை பண்ணிருப் பாருன்னு நினைக்கிறேன். மிகப்பெரிய ஹீரோக்களையெல்லாம் வைத்து டைரக்ட் பண்ணிய எஸ்.ஏ.சி. சார் இன்னும் பல உயரத்திற் குப் போயிருக்க வேண்டியவர்'' என சகஜமாகப் பேசினார்.

இறுதியாகப் பேசிய எஸ்.ஏ.சி.யோ, ""ஜெய்க்கு இது 25-ஆவது படம். எனக்கு இது 70-ஆவது படம். இதுதான் எனக்கு கடைசிப் படம். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாலேயே "போதும்பா ரெஸ்ட் எடுங்க'ன்னு என் மகன் விஜய் சொன்னார்.

Advertisment

sac

ஒரு யங் டீமோடு படம் பண்ணிட்டு ரிட்டையர்டு ஆயிடணும்னு நினைச்சேன். அது இப்ப ஜெய்- அதுல்யா ரவி, வைபவி மூலமா நிறைவேறியிருக்கு. இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த பத்திரிகை சகோதரர் களுக்கு நன்றி'' என உருக்கமாக பேசி நிறைவு செய்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

கடைசிப் படம்னு சொல்றாரு. ஆனா தலைப்பு "கேப்மாரி'-ன்னு வச்சிருக்காரே.

cine090719
இதையும் படியுங்கள்
Subscribe