அதே "பேரழகி ஐ.எஸ்.ஓ.'வில் ஷில்பாவின் பாட்டியாக நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு என்ன சொல்றாருன்னா...
""எம்.ஜி.ஆர்- சிவாஜி காலந்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குநர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாகக்கூறி என்னை அழைப்பதையே மிகப் பெருமையாக நினைக்கிறேன்.. இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sachu_0.jpg)
ஆனால் நான் அவர்களுக்கேற்றாற் போல் என்னை மாற்றிக்கொள் கிறேன்.
அதனால்தான் இந்தப் படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலுங்கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதுங்கூட நிஜத்தில் நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன்.. அதைத் தான் இந்தப்படத்தில் பிரதி பலித்திருக்கிறேன்.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/sachu-t.jpg)