சென்னை அமைந்த கரையில் வசிக்கும் கங்காதரன், தனது உடன்பிறப்புகளால் ஏற்பட்ட மனக்கசப்பால், மனைவியுடன் தனிக்குடித் தனம் போகிறார். கோபி, தயா என்ற இருமகன்களைப் படிக்கவைத்து ஆளாக்குகிறார். சொத்தில் பங்குகேட்டு சொந்த தங்கையே கங்காதரனுடன் மல்லுக்கு நிற்கிறார். இதற்கிடையே கோபி, தயா இருவரும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வேலை பார்த்து நன்றாக சம்பாதிக்கின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு கங்காதரன் மறைந்துவிட, சொத்தைப் பிரித்து வாங்கிய சொந்தங்களோ கண்டுகொள்ளவில்லை. தந்தை யின் இறப்புக்கு தாமதமாக வந்துசேரும் அண்ணனும் தம்பியும் இதை உணர்ந்து, தாயை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

Advertisment

father

உண்மைச் சம்பவங்களை அடிப் படையாக வைத்து உருவான "என் அப்பாவின் கதை' என்ற குறும்படக் கதைதான் மேலே சொன்னது.

கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கோபி கங்காதரன். ஒளிப்பதிவு சுரேஷ் ரங்கா, இசை செல்வா ஜானகிராஜ், ஒலிப்பதிவு பூபதி ராஜா. விஜயலட்சுமி கங்காதரன் இந்தக் குறும்படத்தைத் தயாரித்துள்ளார்.