ட்டு ஆண்டுகளுக்குமுன் கருப்பை புற்றுநோயால் தாக்கப்பட்டு வாழ்கையை வெறுத்துப்போய் ஒதுங்கியிருந்த மனிஷா இப்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

Advertisment

manisha

நேபாள முன்னாள் பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி இவர். கொய்ராலா குடும்பம் என்று இவருடைய குடும்பமே அழைக்கப்படுகிறது.

டெல்லியில் படிக்கும் போது, மாடலிங் செய்து சொந்தக் காலில் நின்றார் மனிஷா. அந்த அனுபவத்தில் இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி மும்பை வந்தார். 1991-ல் இவரை முதலில் கொத்திச் சென்றவர் சுபாஸ் கய். "சவ்டாகர்' என்ற படம் மனிஷாவுக்கு முதல்படமாகவும் வர்த்தக ரீதியில் நல்ல வசூலைக் கொடுத்த படமாகவும் அமைந்தது.

Advertisment

manisha

ஜாடைக்கு மாதுரி தீட்சித்தைப்போல இருந்த தால் வாய்ப்புகள் அவர் வாசலுக்கு வந்து நின்றன. "பர்ஸ்ட் லவ் லெட்டர்', "யால்கார்', "அன்மோல் அண்ட் தன்வான்' என அடுத் தடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித்தந்த நடிகையாக மாறினார்.

1994-ஆம் ஆண்டு விது வினோத் சோப்ரா விடுதலைப் போராட்டக் காலத்தை மையமாக வைத்து "1942 ஏ லவ் ஸ்டோரி' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார். அந்தப் படத்தில் மாதுரி தீட்சித் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தை மனிஷாவுக்கு கொடுத்தபோது இந்தி சினிமா உலகமே திகைத்தது. அந்தப் படத்தில் லிப்லாக் கிஸ் சீன் ரொம்பப் பாப்புலர். படம் பிளாப் ஆனாலும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டுக்கு மனிஷா பரிந்துரைக்கப்பட்டார்.

Advertisment

manisha

அந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் மணிரத்னம் தயாரித்து இயக்கிய "பம்பாய்' திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்தார். ஹிந்தி சினிமாவைத் தாண்டி இந்த விருது வழங்கப்பட்டதில்லை. தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் இந்தப் படத்திற்காக அவர் பெற்றார்.

1996-ஆம் ஆண்டு நானா படேகருடன் "அக்னிசாட்சி' என்ற படத்தில் நடித்தபோது அவருடன் இணைந்து சிலகாலம் வாழ்ந்தார். அதே காலகட்டத்தில் ஏராளமான படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்த மானார். கமல்ஹாஸனுடன் அவர் நடித்த "இந்தியன்' திரைப்படம் ஆஸ்கார் அவார்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங் கள் பிரிவுக்கு இந்திய அரசு பரிந்துரைத்தது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் பிஸியானார் மனிஷா. இதற்கிடையில் அவருக்கு சில நடிகர்களுடன் காதல் தோல்வி என்றும், மதுப்பழக்கம் அதிகமானதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில்தான், அவருடைய உடல் வீக்காக இருப்பதை உணர்ந்து 2012-ஆம் ஆண்டு மருத்துவப் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கருப்பையில் புற்றுநோய் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

""மருத்துவர்கள் சொன்னதும் அப்படியே உள்ளுக்குள் நொறுங்கிப் போனேன். எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை குறிப்பெடுத்து வைத்தேன். எனது உடலை நான் மிகவும் தவறாக பயன்படுத்தியதன் விளைவே இந்த புற்றுநோய்க்கு காரணம் என்பதை உணர்ந்தேன். எனது மனதில் விஷம் கலந்திருந்தது. வாழ்க்கையை மெத்தனமாக அணுகினேன்.

எனது அணுகுமுறை நன்றி கெட்டதனமாக இருந்தது. மிகத் தாமதமாக இதை உணர்ந்தாலும், வாழ்க்கை உடைந்திருந்தது.'' என்று மனிஷா தனது ஹீல்ட் என்ற புத்தகத்தில் மனம் திறந்திருக்கிறார்.

புற்றுநோய் என்று அறிந்தவுடன் அமெரிக்காவி லுள்ள ஸ்லோவன் கெட்டெரிங் கேன்சர் மையத்தில் அட்மிட் ஆனார்.

kamal

அங்கு அவர் வலிமிகுந்த ஒரு ஆண்டு சிகிச்சையை எடுத்துக்கொண்டார். வாழ்வா, சாவா என்ற நிச்சயமற்ற அறுவைச் சிகிச்சை 11 மணிநேரம் நடந்தது. அடுத்து ஆறு மாதங்கள் நரம்பு வழியே மருந்துகள் ஏற்றப்பட்டன. அதாவது, உள்ளுறுப்புகள் அனைத்திலும் புற்றுநோய் வறுக்கப்பட்ட அரிசிபோல பரவியிருந்தது.

மனதிலும் உடலிலும் நம்பிக்கையின்மை, உதவியின்மை, சக்தியின்மை பரவியிருந்தது. நோயுடன் போராடிய அந்த நாட்களையும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவரையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நோய் தாக்குவதற்குமுன் எனக்கு எப்போதும் துணை தேவையிருந்தது. இப்போது எனக்காக செலவிட நேரம் இருக்கிறது. தனியாக பயணம் செய்ய முடிகிறது. திரையுலகில் நான் இருக்கும்போது என்னுடன் பார்ட்டிகளில் பங்கேற்ற நண்பர்கள் 80 சதவிகிதம் பேர் காணாமல் போனார்கள்.

இன்றைக்கு எனக்கு இருக்கிற உறவுகளும் நண்பர்களும் மிக உறுதி யானவர்கள். முதிர்ச்சியும் வாழ்க்கை மாற்றத்தில் ஏற்பட்ட அனுபவமும் என்றைக் கும் வீழ்ந்து விடாது'' என்று உருக்க மாக இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

வாங்க மனிஷா மீண்டும் சினிமாவுக்கு ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியோடும்!

-ஆசோ