சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் "மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிக்கின்றார்.
"பேராண்மை', "புறம்போக்கு' படங்களின் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப் படவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்தப் படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட் டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.
"மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.
மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02/vijaysethupathi-t.jpg)