Advertisment

இசையின் வேலை - பூரிப்பில் சபீர்!

/idhalgal/cinikkuttu/music-work

shabirமீபத்திய இசையமைப்பாளர்களில் கவனம் ஈர்க்கிறார். சபீர். "சகா', "தில்லுக்கு துட்டு- 2' என அடுத்தடுத்து வந்த இரு படங்களின்மூலம் தனித்துவம் அடைந்தி ருக்கிறார். அவர் நம்மிடம் பேசும்போது... ""திருவண்ணாமலைதான் எனக்கு பூர்வீகம். அப்பாவுக்கு திருவண்ணாம

shabirமீபத்திய இசையமைப்பாளர்களில் கவனம் ஈர்க்கிறார். சபீர். "சகா', "தில்லுக்கு துட்டு- 2' என அடுத்தடுத்து வந்த இரு படங்களின்மூலம் தனித்துவம் அடைந்தி ருக்கிறார். அவர் நம்மிடம் பேசும்போது... ""திருவண்ணாமலைதான் எனக்கு பூர்வீகம். அப்பாவுக்கு திருவண்ணாமலை.

Advertisment

அம்மாவுக்கு சிங்கப்பூர். எல்லாருமே சிங்கப்பூரில் தஞ்சம். சிறுவயதில் இருந்தே பாடல்கள் எழுதுவதிலும், இசை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. நானே ஒரு மெட்டுக்குள் வார்த்தைகள்விட்டு, பாடலை வடிவமைப் பேன். அது நண்பர் களின் வட்டாரத்தில் பாராட்டுகள் பெறும். அந்த உந்துதல்தான் இங்கு என்னை அழைத்து வந்திருக்கிறது. "சகா' நல்ல அறிமுகம் தந்திருக்கிறது. இசை மட்டுமில்லாமல்; பாடல் எழுதியும் இருக்கிறேன். ""யாயும்...'' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "தில்லுக்கு துட்டு-2'-வும் நல்லமுறையில் சென்று சேர்ந்திருக்கிறது. உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. இந்த இரண்டு படங்களிலும் அது நன்றாகவே நடந்திருப்பதாக உணர்ந்தேன். இரண்டு படங்களுமே நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டுவந்துள்ளது. வாய்ப்பு தந்தவர்களுக்கு நன்றி. இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தொட்டுவிட்டார்கள்.

அலைகடலும், ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்? இருந்தாலும் அவர்கள் தொடாமல்விட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்'' என்கிறார் சபீர்.

cine050319
இதையும் படியுங்கள்
Subscribe