த்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் "டே நைட்.' இதில் ஆதர்ஷ் நாயகனாக வும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்.கே. கண்டி. இவர், சிம்புவை வைத்து "கெட்டவன்' படத்தை இயக்கியவர்.

dd

"டே நைட்' படம் குறித்து இயக்குநர் என்.கே. கண்டி கூறும்போது, ""ஆஸ்தி ரேலியாவின் கிராமப்புறங் களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப் பட்ட முழு நீள தமிழ்த் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதைவிட, மர்டர் மிஸ்ட்ரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும், திரைக்கதை அமைப்புகளும் மிகப் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை.

படத்தில் வரும் ஒரே ஒரு கதா பாத்திரத்தைத் தவிர, மற்ற எல்லா கதா பாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும், திகிலுடனும், நகைச் சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.