Advertisment

சினிமாவில் "அது' இருக்கு'' -அதிரடி கிளப்பும் வரலட்சுமி!

/idhalgal/cinikkuttu/movie-its-artwick-varalakshmi

"சண்டக்கோழி-2', "சர்கார்' படங்களைத் தொடர்ந்து "நீயா-2' படத்தில் நாக கன்னியாக, "ராஜபார்வை'-யில் பார்வை சவால் கொண்டவராக, "மாரி-2'-வில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கி றார் வரலட்சுமி. அவரிடம் பேசியதிலிருந்து-

Advertisment

varalakshmi

"போடா போடி' படத்திற்குப் பிறகு உங்களை முழுமையான ஹீரோயின்னு சொல்ல முடியலையே? ஹீரோயின்னா என்ன? ஹீரோவை சுற்றிச்சுற்றி வந்து காதலிப்பதா?

Adver

"சண்டக்கோழி-2', "சர்கார்' படங்களைத் தொடர்ந்து "நீயா-2' படத்தில் நாக கன்னியாக, "ராஜபார்வை'-யில் பார்வை சவால் கொண்டவராக, "மாரி-2'-வில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கி றார் வரலட்சுமி. அவரிடம் பேசியதிலிருந்து-

Advertisment

varalakshmi

"போடா போடி' படத்திற்குப் பிறகு உங்களை முழுமையான ஹீரோயின்னு சொல்ல முடியலையே? ஹீரோயின்னா என்ன? ஹீரோவை சுற்றிச்சுற்றி வந்து காதலிப்பதா?

Advertisment

இப்பயெல்லாம் ஹீரோ, ஹீரோயின்னு தனியா யாரும் இல்லை. கதைதான் எல்லாம். "ராஜபார்வை', "நீயா-2' படங்களில் என் கேரக்டர்தான் முதன்மை கேரக்டர்.

இருந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லையே?

அப்படியா? "சர்கார்' படத்துல விஜய், "சண்டக்கோழி-2' படத்துல விஷால்னுலாம் நடிச்சிருந்தேனே, அவங்களுக்கு ஜோடியா நடிச்சா மட்டும்தான் ஏத்துப்பீங்களா?

அவங்க படத்துலே எல்லாம் பவர்புல் ரோல்தானே பண்ணியிருந்தேனே.

அதுவுமில்லாம எனக்கு இன்னும் டைம் இருக்கு பிரதர். பார்க்கலாம்.

சமூகவலைத்தள விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

அப்பா மாதிரி இருக்கேன்னு மீம்ஸ் போட்டிருந்தாங்க.

அப்பா மாதிரிதானே மகள் இருப்பா? இதுமாதிரி மீம்ஸையெல்லாம் பாராட்டா எடுத்துக்கிறதா?

நம்மளைக் கலாய்க்கிறாங் களான்னே புரிஞ்சுக்க முடியலை. அதைப் பத்தி நாம எதுக்குக் கவலைப்படணும்? நமக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குதே சாமி.

சினிமாவில் பாலியல் தொல்லை உண்டா- இல்லையா?

சினிமாவில் என்ன நடக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். சினிமாவில் பலமான பின்புலத்தில் வந்த எனக்கே நடந்திருக்கிறது. நான் இதுபற்றி முன்பு பேசியபோது பழைய நடிகைகள் இதுமாதிரியெல்லாம் எங்களுக்கு நடந்ததே இல்லை என்றார்கள்.

varalakshmi

அதெல்லாம் சுத்தப் பொய்.

அவர்களுக்கு தயக்கம், தன்னோட இமேஜ் பாதிக்கப்படுமோ என்கிற பயம்.

பெரும்பாலானவர்களின் மவுனமே குற்றங்களுக்கு ஆதாரம்.

அரசியலுக்கு வருவீர்களா?

எங்கப்பாவே கட்சி வெச்சிருக்காரு. இருந்தும் நான் இதுவரை நேரடியா அரசியலுக்கு வரலை. ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங் களுக்கு எதிரா போராட அவசியம் என்றால் அரசியலுக்கு வரவும் தயங்கமாட்டேன்.

-பரமு

cine010119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe