Advertisment

12 நாளில் ஒரு படம்!

/idhalgal/cinikkuttu/movie-12-days

ஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா.' நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார்.

Advertisment

24daysflim

இவர்களுடன் டெல்லி

ஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா.' நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார்.

Advertisment

24daysflim

இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, "விஜய் டிவி' ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் 12 நாட்களில் இயக்குநர் நவீன் மணிகண்டன் முடித்திருப்பதுதான் ஆச்சரியம்! அதிலும், மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகளையும் இந்த நாட்களிலேயே படமாக்கியிருக்கிறார்!

Advertisment

12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தது எப்படி என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, ""நான் சினிமாத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினாலும், கேமரா உதவியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறேன். அத்துடன், படப்பிடிப்புக்குச் செல்வதற்குமுன்பு, எப்படி தயாராகவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்ததால்தான், 12 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது.

இளைஞர்களுக்கான ஒரு படமாகவும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு படமாகவும் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' இருக்கும்.

பொறுப்பில்லாமல் இருக்கும் ஹீரோவை திருத்த, அவரது அப்பா பலமுறை முயன்றா லும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் அதே அப்பாவுக்காக ஹீரோ பொறுப்பானவராக மாறுகிறார். அதற்கு அவரது காதலியும் ஒரு காரணமாக அமைகிறார். அது எப்படி என்பதுதான் கதை'' என்றார்.

cini311219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe