மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் "கடமான் பாறை.'
இந்தப் படத்தில் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். சிங்கம், புலி, கரடி, சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக மன்சூரலிகான் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krvijaya.jpg)
இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.
இயக்குனர் மன்சூரலிகானிடம் என்ன மாதிரியான படம்னு கேட்டதற்கு- "இந்தப் படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது. அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார். ஏற்கெனவே நான் தயாரித்த "வாழ்க ஜனநாயகம்' படத்தின்போது வளர்ந்துவரும் நடிகனான நான் கேட்ட உடனே கே.ஆர். விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார். இப்போதும் "கடமான் பாறை' படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான- எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போதுபோல இப்போதும் இருக்கிறார்.
எனக்கு ஜோடியாக ருக்ஷா என்ற கேரள பெண் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/krvijaya-t.jpg)