Advertisment

ஒரு "மாதிரி'யா பாக்குறாங்க -சதா ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/model-pakarangana-sadha-open-talk

டந்த 7-ஆம் தேதி "டார்ச் லைட்' ரிலீஸ். அதற்கு முதல்நாள் நாயகி சதா பேசினார். ""நான் சற்று இடைவெளிக்குப்பின் தமிழில் sadhaநடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. "டார்ச் லைட்' படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒருமுறை சொன்னார். கதை ப

டந்த 7-ஆம் தேதி "டார்ச் லைட்' ரிலீஸ். அதற்கு முதல்நாள் நாயகி சதா பேசினார். ""நான் சற்று இடைவெளிக்குப்பின் தமிழில் sadhaநடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. "டார்ச் லைட்' படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒருமுறை சொன்னார். கதை பிடித்தது.

Advertisment

ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூறமுடியவில்லை . சரியாக வருமா- நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது. மஜீத் என்மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். இதுமாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.

Advertisment

அதுதான் பிரச்சினை. ட்ரெய்லர், போஸ்டர் பார்த்துவிட்டு படத்தை முடிவு செய்யக்கூடாது. படம் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

பாலியல் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மனஅழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

பலவகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்'' என்று உருக்கமாகப் பேசினார் சதா.

இயக்குநர் அப்துல் மஜீத் பேசும்போது, ""இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான். ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன். ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார்.

அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார்.

அதன்பிறகு தயக்கத்தை விட்டுவிட்டு நடிக்கத் தயாராகி விட்டார். அந்தக் கதா பாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.

படம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல'' என்றார்.

cine180918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe