தங்கர்பச்சானிடம் இணை இயக்குநராக இருந்த கீரா, "பச்சை என்கிற காத்து' படம்மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
"பச்சை என்கிற காத்து' பேசிய அரசியல் சினிமா உலகில் பேசு பொருளாகியது. தமிழ் தேசியம்மீது அதிக பற்றுகொண்ட கீராவின் இரண்டாவது படம் "மெர்லின்' த்ரில்லர் ஜானரில் வந்தது.
""இப்போது மூன்றாவதாக "பற' என்கிற படத்தை எடுத்துவிட்டு, படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் கீரா'' என நமது கோலிவுட் சோர்ஸ் தகவலை பாஸ் பண்ணினார். சரி கீராவிடமே கேட்ருவோமே என்ற முடிவுடன் கடந்த 18-ஆம் தேதி பிரசாத் லேப்பில் அவரை சந்தித் தோம்.
""ஆமாண்ணே, ரொம்பவே நொம்பலப்படுத்துறாய்ங்க'' என ஆரம்பித்தா
தங்கர்பச்சானிடம் இணை இயக்குநராக இருந்த கீரா, "பச்சை என்கிற காத்து' படம்மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
"பச்சை என்கிற காத்து' பேசிய அரசியல் சினிமா உலகில் பேசு பொருளாகியது. தமிழ் தேசியம்மீது அதிக பற்றுகொண்ட கீராவின் இரண்டாவது படம் "மெர்லின்' த்ரில்லர் ஜானரில் வந்தது.
""இப்போது மூன்றாவதாக "பற' என்கிற படத்தை எடுத்துவிட்டு, படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் கீரா'' என நமது கோலிவுட் சோர்ஸ் தகவலை பாஸ் பண்ணினார். சரி கீராவிடமே கேட்ருவோமே என்ற முடிவுடன் கடந்த 18-ஆம் தேதி பிரசாத் லேப்பில் அவரை சந்தித் தோம்.
""ஆமாண்ணே, ரொம்பவே நொம்பலப்படுத்துறாய்ங்க'' என ஆரம்பித்தார். ""ஆரணியிலிருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறது ஒரு காதல் ஜோடி. காதலிக்கோ, கோவிலில் தாலி கட்டிக்கொள்வதை விட, ரிஜிஸ்தர் ஆபீசில் கல்யாணம் செய்துகொண்டால், சமூகத்தில் ஒரு அந்தஸ்தும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறார். லாரி க்ளீனரான காதலனுக்கும் அதே ஆசை இருக்கிறது. வடசென்னை ஏரியாவில் ப்ளாட் பாரத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வயதான இஸ்லாமியப் பெண்மீது காதலாகி கல்யாணம் செய்துகொள்ளும் ஆசை.
ப்ளாட்பாரத்தில் வசிக்கும் சின்னச்சின்ன கேரக்டர்கள், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகள், அவர்களை என்கவுண்டரில் போடத்துடிக்கும் போலீஸ், போராளிகளுக்கு ஆதரவாக இருக்கும் வக்கீல் என மிகக் குறைந்த கேரக்டர்கள்தான் மொத்த படமும். இரவு 12 மணிக்கு கதை ஆரம் பித்து, மறுநாள் 12 மணிக்குள் முடிந்துவிடும். இதில் போராளி களின் வக்கீலாக அம்பேத்கர் என்ற கேரக்டரில் அண்ணன் சமுத்திரகனி நடித்திருக் கிறார்.
மற்ற கேரக்டர்களுக்கு வரும் பிரச்சினைகள், சங்கடங்கள் எல்லாம் அதனதன் வழியில் கடந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால் இந்த காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத்தான் அழுத்தமாகச் சொல்லிருக்கேன். சுருக்கமாக சொல்லணும்னா ஆணவப் படுகொலைக்கு எதிரான கருத்தை வலுவுடனும் வலியுடனும் சொல்லிருக்கேன்.
மொத்த படத்தையும் முடிச்சுட்டு சென்சாருக்கு போனப்ப, "மொதல்ல "பற'ங்கிற டைட்டிலையே மாத்துங்க! ஏன்னா, அது சாதி அடையாளமா இருக்கு'ன்னு அதிர்ச்சியூட்டினார்கள்.
அது சாதியக் குறிக்கிறதில்ல. "பற'ன்னா "பறக்குறது'ன்னு அர்த்தம்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கல சென்சார் அதிகாரிகள். ஒரு சீனில் தலைவர் பிரபாகரன் படத்தக் காட்டியிருந்தேன். அத கட் பண்ணிட்டாங்க. சரி, நம்மளோட உழைப்பும் கருத்தும் மக்களுக்குப் போய்ச் சேரணும்னு முடிவுபண்ணி, "எட்டுத் திக்கும் பற'ன்னு டைட்டிலை மாத்தி, கடந்த வாரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான டீசரை ரிலீஸ் பண்ணினேன்.
அப்பதான் வில்லங்கமே ஆரம்பிச்சது. நான் ஏதோ ஒரு சாதிக்கு எதிரானவன்னு நினைச்சுக்கிட்டு, "டேய் நீ யார்டா? என்ன சாதிடா? ஒழுங்கு மரியாதையா படத் தைப் பெட்டிக்குள்ள வச்சு பூட்டு. இல்லேன்னா நடக்குறதே வேற'ன்னு ஃபோனில் மிரட்டல்கள் வருது, மெசேஜ் வருது. இந்தப் படத்தைப் பார்த்த ஐயா நல்லகண்ணு, "இப்ப இருக்குற நிலைமைக்கு இந்தப் படம் ரொம்ப அவசியம்'னு பாராட்டிட்டு, "க்ளைமாக்சில் கதாநாயகனை சாகடிக்கிறமாதிரி காட்டாமல் இருந்திருக்கலாமே தம்பி'ன்னு ஆலோசனையும் சொன்னார்.
என்னைப் பொருத் தவரைக்கும் உயர்சாதியில் பிறந்து, அதே சாதியால் வஞ்சிக் கப்பட்டாலும் அவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான்'' எனச் சொல்லி நம்மைக் கலங்க வைத்தார் கீரா.
-ஈ.பா.பரமேஷ்வரன்