ஏழையாக வாழ்ந் தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன்.
அநாதையாகப் பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அநாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக் குறைய 500 அநாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.
இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக் காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன். இந்த இரக்கமுள்ளவரின் வீட்டையும் இரக்க மில்லாமல் கஜா காவு வாங்கிவிட. அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய்விட்டார்.
இதை கேள்விப் பட்ட ராகவா லாரன்ஸ் அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக்கொடுக்க முடிவெடுத்து அதற் கான பூமி பூஜையைத் துவக்கிவைத்தார்.
""அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன்'' என்கிறார் ராகவா லாரன்ஸ்.
வேதனையா இருக்கு
காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்தமாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானதுதான் "சீமத்துரை' படம்.
படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ரிலீசாகி யுள்ளது "சீமத்துரை.'
""தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையைச் சுற்றிதான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையைச் சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்களைப் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாகப் படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது படக்குழுவிலுள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள்.
அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் படத்தின் டைரக்டர் சந்தோஷ் தியாகராஜன்.
அலிபாபாவும் குழந்தைகளும்!
இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு "அலிபா பாவும் 40 குழந்தைகளும்' என்று
வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் புதுமுகம் போஸ் கதாநாய கனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடை பெற்றுவருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன்,தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்வுள்ளனர்.
ஒளிப்பதிவு- சங்கர், இசை- ஜெய்குமார், பாடல்கள்- யுகபாரதி, எடிட்டிங்- வீரசெந்தில்ராஜ், ஸ்டண்ட்- இடிமின்னல் இளங்கோ, நடனம்- தினேஷ், சிவசங்கர், மக்கள் தொடர்பு- மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை- பாண்டியன். "மாசாணி', "ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி. ரவிச்சந்தர் கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய "நான் அவளை சந்தித்தபோது' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவர் இயக்கும் நான்காவது படம் இது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/geethan-t.jpg)