ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் "மகாமுனி'.

mixing matters

ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குகிறார் "மௌனகுரு' சாந்தகுமார்.

ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுபெற்ற வி.கே. சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

சண்டைப் பயிற்சியை ஆக்ஷன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ""க்ரைம், திரில்லர், ஜேனரில் "மகாமுனி' தயாராகிறது. திரைக்கதை அனைத்து தரப் பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டி ருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்'' என்றார்.

வானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் "புரொடக்ஷன் நம்பர்- 2.'

இதில் ஆன்ட்ரியா, ஜே.கே, அஷ்தோஷ் ராணா, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Advertisment

andrea

ராஜேஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை "தில்' சத்யா இயக்குகிறார்.

இவர் கன்னடத்தில் "தில்' என்ற வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், "ராஜ் பகதூர்' உள்ளிட்ட சில படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்குமேல் நடன இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஆன்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்), ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

Advertisment