Advertisment

கலக்கிய நடிகைகளும்! கவுந்த நடிகைகளும்!

/idhalgal/cinikkuttu/mixed-actresses-worried-actresses

தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவுடனான உரசலுக்குப்பிறகு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்தார் நடிகை ரோஜா.

Advertisment

rtgagg

அவருக்கு செல்வாக்குள்ள நகரி தொகுதியி லேயே போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தார் ஜெகன்மோகன் ரெட்டி. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக்கொண்ட ரோஜா, அமோக வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண் டாவது முறையாக ஆந்திராவின் சட்டமன்றத் துக்குள் நுழைய இருக்கும் உற்சாகத்துடன் பேசிய ரோஜா, ""ஜெகன் என்னை ஒரு சகோதரிபோல நடத்துகிறார். எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என் தோளில் சுமந்து, என் கடமையை நிறைவேற்றுவேன்'' என்கிறார் உத்வேகம் பொங்கும் சிரிப்புடன். ரோஜா வுக்கு அமைச்சர் பதவி கிடைச்சா நல்லாருக்கும்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி களில் சில படங்களில் கிளாமர் குத்தாட்டம் போட்டவர் நவ்நீத்கவுர்.

Advertisment

ccaவெறும் ஆறு வருடங்களே நீடித்த அவரது மோசமான சினிமா வாழ்க்கை, எம்.எல்.ஏ. ரவி ரானா வைத் திருமணம் செய்தபிறகு பளிச் ஆகிவிட்டது. அங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே எம்.பி.யாக தேர்

தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவுடனான உரசலுக்குப்பிறகு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்தார் நடிகை ரோஜா.

Advertisment

rtgagg

அவருக்கு செல்வாக்குள்ள நகரி தொகுதியி லேயே போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தார் ஜெகன்மோகன் ரெட்டி. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக்கொண்ட ரோஜா, அமோக வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண் டாவது முறையாக ஆந்திராவின் சட்டமன்றத் துக்குள் நுழைய இருக்கும் உற்சாகத்துடன் பேசிய ரோஜா, ""ஜெகன் என்னை ஒரு சகோதரிபோல நடத்துகிறார். எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என் தோளில் சுமந்து, என் கடமையை நிறைவேற்றுவேன்'' என்கிறார் உத்வேகம் பொங்கும் சிரிப்புடன். ரோஜா வுக்கு அமைச்சர் பதவி கிடைச்சா நல்லாருக்கும்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி களில் சில படங்களில் கிளாமர் குத்தாட்டம் போட்டவர் நவ்நீத்கவுர்.

Advertisment

ccaவெறும் ஆறு வருடங்களே நீடித்த அவரது மோசமான சினிமா வாழ்க்கை, எம்.எல்.ஏ. ரவி ரானா வைத் திருமணம் செய்தபிறகு பளிச் ஆகிவிட்டது. அங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே எம்.பி.யாக தேர்வாகி விட்டார். முதலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நவ்நீத் தோற்றுவிட்டார். அதன் பிறகு, தனது வியூகங்களை மாற்றிக்கொண்டு கணவர் ரவி ரானா உருவாக்கிய யுவ ஸ்வபிமானி ப்ரக்ஷா என்ற கட்சியின் சார்பில் மும்பை அமராவதி தொகுதியில் சுயேட்சை யாக போட்டியிட்டு, சிவசேனாவின் பெரிய தலை ஒருவரை வீழ்த்தி இருக்கிறார். சினிமாவில் டல் அடித்தாலும், அரசியலில் பிரகாசமாக ஜொலிக்கிறார் நவ்நீத் என்னதான், "ஹெலிகாப் டரில் போய் வியர்வை கொட்ட விவசாயம் செய்தார், பென்ஸ் காரில் திறந்த மேற்கூரை வழியாக பிரச்சாரம் செய்தார்' என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்தாலும், மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பாஜகவிற்காகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் நடிகை ஹேமமாலினி. உபி மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றிபெற்ற கையோடு பேட்டி கொடுத்திருக்கும் ஹேமமாலினி, ""மோடியின் aaதிட்டங்களால்தான் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். இரண்டாவது தடவையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி, இந்தியாவுக்காக பெரிய ப்ளான் வைத்திருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'' என்று சொல்லி இருக்கிறார்.

கர்நாடகாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் அம்பரீ ஷின் மனைவி சுமலதா, சுயேட்சையாக போட்டி யிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று கெத்து காட்டியிருக்கிறார். காங்கிரஸ்மீதான வெறுப்புடனே அரசியலில் குதித்த அவர், எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் நாடவில்லை. இதை தனக் காகப் பயன்படுத்திக்கொண்ட பாஜக அவருக்கு ஆதரவைத் தெரிவித்து, வெற்றிபெற வைத்தது. இப்போது மாண்டியா தொகுதி எம்.பியாகி இருக்கும் சுமலதாவிற்கு, நிபந்தனையற்ற ஆதரவு தர பாஜக முன்வருகிறதாம். அதை அவரே சொல்றாரு.

""இதுபற்றி இன்னமும் முடிவு செய்யல.

மாண்டியா மக்களோட கலந்தாலோசிச்சிட்டு நல்ல முடிவைச் சொல்றேன்'' என அனுப்பிவிட்டாராம்.

திரிணாமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெயிட்டான, ஹாட்டான, க்யூட்டான இரண்டு திரைத்துறை பிரபலங்களை களமிறக்கியது. மிமி சக்கரவர்த்தி, நுஷ்ரத் ஜஹான் ஆகிய இருவர்தான் அந்த வெயிட் பார்ட்டிகள். இருவருமே நினைத் ததுபோலவே மம்தாவுக்கு வெற்றியைத் தேடித் தந்து, பார்லிமென்டிலும் நுழைந்துவிட்டார்கள். அங்குதான் பிரச்சினை கிளம்பியது. பார்லிமெண் டுக்கு போகப்போறோமே என்ற குதூகலத்தில் இருந்தார்களோ என்னவோ, இருவருமே வெஸ்டர்ன் காஸ்டியூமில் கிளம்பிவிட்டார்கள். டைட்டான ஜீன்ஸ், மேற்சட்டையும், இன்னொரு டைட்டான ஃபுல்பாடி அட்டையருமாக அழகாக ddபோயிருந்தார்கள் இருவரும். இந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட, "பார்லிமெண் டுக்கு போறவங்க, அடக்க ஒடுக்கமா போக வேணாமா, என்று "ஆனந்தம்' பட மம்மூட்டி ரேஞ்சுக்கு ஜாடைமாடையாக வசைபாட, ஒரு பெருங் கூட்டமே "இருவருக்கும் நாங்க இருக்கோம். இதுல என்ன தப்பு இருக்குங்றேன்' என்று ஆதரவு தெரிவிக்க வந்துவிட்டார் கள். ஒருவழியாக பஞ்சாயத்து எந்த பைசலும் இல்லாமல் முடிந்துவிட்டது. பார்லிமெண்டுக்கு இந்த ட்ரெஸ்லதான் வரணும்னு எதுவும் கட்டாயம் இருக்கா என்ன? பாலிவுட் படங் களில் நடித்து பிரபலமானவர் ஊர்மிளா மடோன்கர். இவர் காங்கிரஸ் கட்சியில் திடீரென சேர்ந்தார். சேர்ந்ததுமே மும்பை மேற்கு தொகுதியில் போட்டி யிடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. நல்ல பரீட்சயமான முகம். சகஜமாகப் பழகக் கூடியவர் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் களமிறக்க, பாஜகவின் கோபால் ஷெட்டியிடம் தோற்றுவிட்டார் ஊர்மிளா. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் புனேவைச் சேர்ந்த ஒருவர், ஊர்மிளாவின் கிளாமர் படங்களை மோசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்டித்து புகார் கொடுத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறாராம்.

சமாஜ்வாதி கட்சியின் ஆசம்கானின்மூலமாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு, அமர்சிங்கிடம் நெருக்கமாகி, ஆசம்கானையே ஓவர்டேக் செய்து, அரசியலில் டாப் கியருடன் பயணித்து... பா.ஜ.க.-வில் இணைந்து யார்மூலமாக அரசியலுக்கு வந்தாரோ, அவருக்கு எதிராகவே உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போயிருக்கிறார் நடிகை ஜெயப்பிரதா. இதுவரை சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்ட ஆசம்கான், முதன்முதலாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு ஜெயப்ரதாவின் அரசியல் எதிர்காலத்தை பின்னோக்கி இழுத்துவிட்டார்.

noor

இதையடுத்து பேசிய ஆசம்கான், ""இந்த மக்களுக்கு ஜெயப்பிரதாவை அடையாளம் காண 17 ஆண்டுகாலம் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் காக்கி ட்ரவுசர் அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்தவன் நான்'' என்று ஆபாசமாகப் பேசி சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.

-மதி

cine180619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe