Advertisment

மிஸ்டர் டிஸ்டர்பன்ஸ்

/idhalgal/cinikkuttu/misster-durpans

"களவாணி-2' படத்தின் வியாபார விஷயத்தில் விமல் பண்ணிய ஏகப்பட்ட குளறுபடிகளால், பட ரிலீசுக்கு பல வழிகளிலும் டிஸ்டர்பன்ஸாக இருந்தார் விநியோகஸ்தரான சிங்காரவேலன்.

Advertisment

dr

"எனக்கு ஒரு வழி சொல்லாம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது' என சிங்காரவேலன் கோர்ட்டுக்குப்போக, ரிலீசுக்கு தடை விதித்த

"களவாணி-2' படத்தின் வியாபார விஷயத்தில் விமல் பண்ணிய ஏகப்பட்ட குளறுபடிகளால், பட ரிலீசுக்கு பல வழிகளிலும் டிஸ்டர்பன்ஸாக இருந்தார் விநியோகஸ்தரான சிங்காரவேலன்.

Advertisment

dr

"எனக்கு ஒரு வழி சொல்லாம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது' என சிங்காரவேலன் கோர்ட்டுக்குப்போக, ரிலீசுக்கு தடை விதித்தது கோர்ட். மேல்முறையீட்டில் அந்தத் தடையை உடைத்தார் படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான சற்குணம். மறுபடியும் சிங்காரவேலன் குடைச்சல் கொடுக்க, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் சற்குணம். இதற்கிடையே தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம், தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் நடத்தும் அறக்கட்டளைக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து சீன் போட்டார் சிங்காரவேலன். சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்ததோ, ""விமலுக்கும் எனக்கும் ராசி ஒப்பந்தம் ஆகிவிட்டது. எனவே "களவாணி-2' ரிலீஸ் ஆவதில் எந்தத் தடங்கலும் இல்லை'' என டிக்ளேர் பண்ணிவிட்டார் சிங்காரவேலன்.

விமல்- ஓவியா, "தப்பாட்டம்' ஹீரோ "பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் பொலிட்டிக்கல் வில்லனாக அறிமுகமாகும் "களவாணி-2' இந்த மாதக்கடைசியில் ரிலீசாகலாம். ""ஓவியாவுடன் சீன் இருக்கா'' என துரை சுதாகரிடம் கேட்டதற்கு, ""அதெல்லாம் டைரக்டர்தான் சொல்லணும்ணே'' என்றார்.

மிஸ்டர் ஹைகிளாஸ்

Advertisment

siva

சிவகார்த்திகேயேன் சம்பளம் 15 கோடி, நயன்தாரா சம்பளம் 6 கோடி, டைரக்டர் ராஜேஷ். எம். சம்பளம் 3 கோடி, தயாரிப்புச் செலவு மற்றும் விளம்பரச் செலவு என மொத்தம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முடிந்த "மிஸ்டர் லோக்கல்' படத்தை ஒட்டுமொத்தமாக 65 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

cine280519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe