Advertisment

மிஷ்கின் சீட்டிங் சரண்டர்!

/idhalgal/cinikkuttu/miskins-cheating-surrender

சிகர்களின் பேராதரவும், பத்திரிகைகளின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் ஏகப்பட்ட விருதுகளையும் குவித்த படம் "பரியேறும் பெருமாள்.' இப்படத்தை டைரக்டர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணியிருந்தார். இந்த "பரியேறும் பெருமாள்' இப்போது கன்னடத்தில் ரீமேக்காகிறது. தமிழில் இப்படம் தாறுமாறு ஹிட் அடித்ததைக் கேள்விப்பட்ட கன்னட சினிமாவின் இளம் ஹீரோக்கள் பலர், ரீமேக்கில் நடிக்க முட்டி மோதினார்கள்.

Advertisment

ஆனால், படத்தின் டைரக்டர் காந்தி மணிவாசகமோ (தினேஷ்- அதிதி மேனன் ஜோடியில் "களவாணி மாப்பிள்ளை-2' படத்தை டைரக்ட் பண்ணியவர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த மைத்ர

சிகர்களின் பேராதரவும், பத்திரிகைகளின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் ஏகப்பட்ட விருதுகளையும் குவித்த படம் "பரியேறும் பெருமாள்.' இப்படத்தை டைரக்டர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணியிருந்தார். இந்த "பரியேறும் பெருமாள்' இப்போது கன்னடத்தில் ரீமேக்காகிறது. தமிழில் இப்படம் தாறுமாறு ஹிட் அடித்ததைக் கேள்விப்பட்ட கன்னட சினிமாவின் இளம் ஹீரோக்கள் பலர், ரீமேக்கில் நடிக்க முட்டி மோதினார்கள்.

Advertisment

ஆனால், படத்தின் டைரக்டர் காந்தி மணிவாசகமோ (தினேஷ்- அதிதி மேனன் ஜோடியில் "களவாணி மாப்பிள்ளை-2' படத்தை டைரக்ட் பண்ணியவர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த மைத்ரேயா என்ற இளைஞரை கன்னட பரியேறும் பெருமாள-ôக செலக்ட் பண்ணிவிட்டார்.

miskin

செலக்ட் பண்ணிய கையோடு, படத்தின் கதைக்களமான பெங்களூரூ பகுதிகளில் வசிக்கும் சாதாரண மக்களிடம் மைத்ரேயாவைப் பழகவைத்து, அந்த மக்களின் நடை, உடை, பாவனை, பேச்சு மொழி ஆகியவற்றையெல்லாம் கற்றுத் தெரிந்துகொள்ள வைத்தார். மைத்ரேயாவும் முழுவீச்சில் தயாராகிவிட்டதால், படத்தின் துவக்க விழா, விரைவில் பெங்களூரூவில் நடக்கவிருக்கிறது. (கரன்ட் மேட்டர் ஓவர். இனிமேல் வருவது சீட்டிங் ஃப்ளாஷ்பேக் மேட்டர்.)

இந்த மைத்ரேயா என்ற இளைஞர் வேறுயாருமல்ல; பாரம்பரியமிக்க சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்.மின் உரிமையாளர்களில் ஒருவரான ஏ.வி.எம். சரவணனின் பேத்தி, அதாவது சரவணனின் மகன் எம்.எஸ். குகனின் மகள் அபர்ணாவைத் திருமணம் செய்தவர். இந்த மைத்ரேயாதான் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தங்களது சினிமா தயாரிப்பு நிறுவனமான டிரான்ஸ் ஓல்டு கம்பெனியில் தான் ஹீரோவாக நடிக்க படம் பண்ணித் தருவதற்காக டைரக்டர் மிஷ்கினுக்கு ஒன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்.

Advertisment

miskin

அட்வான்ஸ் கொடுத்து ஒரு வருடம் கழித்து மிஷ்கினைச் சந்தித்து படம் ஆரம்பிப்பது குறித்து மைத்ரேயா கேட்டபோது, """சவரக்கத்தி' முடிஞ்சதும் உனக்குத்தான் படம்'' என்றார். அது முடிந்ததும் போய் கேட்டபோது விஷாலை வைத்து எடுத்துக்கொண்டிருக்கும் "துப்பறிவாளன்' முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ணிடலாம் என்றார் மிஷ்கின். இப்படியே டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த மிஷ்கின், மைத்ரேயாவிடம் சொன்ன அதே கதையை உதயநிதியிடம் சொல்லி, "சைக்கோ' என டைட்டில் வைத்து விளம்பரமும் செய்துவிட்டார். இதையெல்லாம் பார்த்த மைத்ரேயா, மிஷ்கினிடம் கேட்டபோது, ""உன்னால முடிஞ்சதப் பார்த்துக்க'' என எகத்தாளமாகக் கூறிவிட்டார். (இந்தக் கூத்தையெல்லாம் 2018 அக்.16 தேதியிட்ட சினிக்கூத்து இதழில் மிஷ்கின் சீட்டிங்! உதயநிதி உடைந்தையா? என்ற தலைப்பில் அட்டைப்பட செய்தியாக வெளியிட்டிருந்தோம்).

உதயநிதிக்கு அதிதி ராவ் ஹைதாரியை ஜோடியாக போட்டு, கோயமுத்தூர் ஏரியாவில் "சைக்கோ'-வின் ஷூட்டிங்கையும் ஸ்டார்ட் பண்ணிவிட்டார் மிஷ்கின். பார்த்தார் மைத்ரேயா. இனிமேலும் விடக்கூடாது என்ற முடிவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு "சைக்கோ'-வின் ஷூட்டிங்கிற்கு ஸ்டே வாங்கிவிட்டார்.

இதனால் டென்ஷனான உதயநிதி, ""உங்க பஞ்சாயத்தை முடிச்சிட்டு வாங்க. அதுக்கப் புறமா படத்தை கன்டினியூ பண்ணலாம்'' எனக் கூறிவிட்டார். இப்படியே போனா நம்ம பொழப்பு நாறிடும் என நினைத்த மிஷ்கின், ""2019 நவம்பருக்குள் ஒன்றரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து மைத்ரேயாவுக்கு கொடுத்து விடுகிறேன்'' என கோர்ட்டிலேயே எழுதிக்கொடுத்திருக்கிறார்.

இதற்குப் பின்னும் மைத்ரேயாவுக்கு டிமிக்கிகொடுக்க நினைத்தால் மிஷ்கினுக்கு மண்டையடிதான்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine020419
இதையும் படியுங்கள்
Subscribe