ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர் , அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் "களவாணி சிறுக்கி.' இப்படத்தின் டைரக்டர் ரவிராகுல்.

diwakar

கிராமத்தில் படித்துவிட்டு வீட்டிலிருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய்மாமா மருதுவிற்குத் திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கல்யாணத்தில் பிரச்சினை வருகிறது. பாண்டியும் நான்தான் கஸ்தூரியைத் திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான். கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதே நேரத்தில் அந்த ஊருக்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கும் காதல் மலர பல பிரச்சினைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கும் கல்யாணம் நடைபெறுகிறது. முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அரவிந்தைக் கொன்றது மருதுவா, கதிரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் படம்தான் "களவாணி சிறுக்கி.'

இந்தப் படம் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

படம் வெளியாகும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலைக் காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு விலையுர்ந்த "143 பிராண்ட்' கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள். படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் த. நமச்சிவாயம்.

Advertisment