ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் "ஆண்கள் ஜாக்கிரதை'. இந்தப் படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

Advertisment

ஒளிப்பதிவு- எம்.பி. சிவகுமார், இசை- பாலகணேஷ், எடிட்டிங்- ஜி.வி. சோழன், விளம்பர வடிவமைப்பு- அயனன், தயாரிப்பு - ஜெமினி ராகவா, இணைத் தயாரிப்பு- க. முருகானந்தம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கே.எஸ். முத்துமனோகரன்.

Advertisment

படம் பற்றி இயக்குநர் முத்து மனோகரன் கூறியதாவது...

mm

""இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.

அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இந்தியாவிலேயே முதன்முறையாக 2,000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது.

Advertisment

கிளைமாக்ஸ் காட்சி யில் அனைத்து முதலை களும் ஒன்றாக சேர்ந்து வருவதுபோல் ஒரு காட்சி இருக்கிறது.

அந்த காட்சியை திரை யில் பார்க்க படுபயங்கர மாக இருக்கும். அது தான் இந்தப் படத்தின் ஹைலைட் காட்சி. படம் விரைவில் வெளியாக உள்ளது'' என்றார்.