Advertisment

மீரா மிதுனும் டுபாக்கூர் டாக்டரும்

/idhalgal/cinikkuttu/meera-mithun-and-tupacur-doctor

"மிஸ் சௌத் இந்தியா' அழகிப்போட்டியை நடத்தும் ஜோ மைக்கேலுக்கும், கணவர் இருப்பதை மறைத்து அழகிப் பட்டம் வாங்கிய சின்ன நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பெரிய பிரச்சினை வெடித்தது. ஒருவர்மீது ஒருவர் புழுதிவாரித் தூற்றினார்கள்.

Advertisment

dd

ஜோ மைக்கேல்மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் மீரா மிதுன். அந்தப் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், மாநகர கமிஷனர்மீதும், முதல்வர் எடப்பாடிமீதும் பகிரங்கமாக புகார் சொன்னார் மீரா மிதுன்.

Advertisment

இதனால் கடுப்பான கமிஷனர், இரண்டு போலீசார்மூலம் மீரா மிதுன்ம

"மிஸ் சௌத் இந்தியா' அழகிப்போட்டியை நடத்தும் ஜோ மைக்கேலுக்கும், கணவர் இருப்பதை மறைத்து அழகிப் பட்டம் வாங்கிய சின்ன நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பெரிய பிரச்சினை வெடித்தது. ஒருவர்மீது ஒருவர் புழுதிவாரித் தூற்றினார்கள்.

Advertisment

dd

ஜோ மைக்கேல்மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் மீரா மிதுன். அந்தப் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், மாநகர கமிஷனர்மீதும், முதல்வர் எடப்பாடிமீதும் பகிரங்கமாக புகார் சொன்னார் மீரா மிதுன்.

Advertisment

இதனால் கடுப்பான கமிஷனர், இரண்டு போலீசார்மூலம் மீரா மிதுன்மீது புகார் கொடுக்க வைத்தார். இனிமேல் இங்கே இருந்தா கம்பி எண்ணி களி தின்ன வேண்டியிருக்கும் என பயந்து, மும்பைக்கு ஓடிவிட்டார். கடந்த நான்கு மாதங்களாக மும்பையில்தான் பதுங்கியுள்ளார்.

"பங்காளி மோர்ல கரப் பான்பூச்சி! தான் கிடந்துச்சு. சாம்பார்ல பெருச்சாளியே கிடந்துச்சு. அதயவே தூக்கிப் போட்டுட்டு தூர் வாரிக்கிட்டிருக்கோம். நீ ரசத்த ஊத்து. அதுல என்ன கிடக்குன்னு பார்ப்போம்'கிற கதையா, திருகுஜால வேலை ஒன்றைச் செய்தார் மீரா மிதுன்.

meera

அது என்னான்னா... ""மத்திய அரசாங்கத்தின்கீழ் செயல்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குநராக என்னை நியமித்திருக்கிறார்கள். ஆகவே, ஊழல் செய்வோர் யாரும் என்னிடமிருந்து தப்பிக்கவும் முடியாது, ஓடி ஒளியவும் முடியாது. நான் எந்நேரமும் உங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருப்பேன்'' (இது வேறயா) என ட்விட்டரில் போட்டு பொளந்தார். அதுவும் மீரா மிதுன் என்ற பெயருக்குப் பதிலாக தமிழ்ச்செல்வி என அடையாள அட்டையையும் ட்விட்டியிருந்தார். (ஆணையம்னு சொல்வதே பெரிய போர்ஜரி, இதுல பேர்லயும் போர்ஜரியா?)

இப்படிப்பட்ட டுபாக்கூர் ஆணையத்தின் பேரைச் சொல்லி உதார்விட்டுக் கொண்டிருந்த மீரா மிதுனை தமிழ்நாடு மாநில இயக்குநர் பதவியிலிருந்து, கடந்த டிசம்பர் மாதம் நீக்கிவிட்டதாகச் சொல்லி மீரா மிதுனுக்கு லெட்டர் அனுப்பியது டுபாக்கூர் ஆணையம். (இதென்னாடா மீரா மிதுனுக்கு வந்த சோதனை!).

meera

அந்தக் கூத்து அத்தோட முடிஞ்சு போச்சுன்னு பார்த்தா, இப்ப என்னடான்னா திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ஏ.முகமது ஹக்கீம், ""மீரா மிதுன் இருந்த போஸ்டிங்கில் என்னை நியமித்துள்ளனர். ஆகவே இனிமேல் நான்தான் ஊழல் தடுப்பு ஆணை யத்தின் தமிழ்நாடு மாநில இயக்கு னர்'' என பீதியைக் கிளப்பியுள்ளார். (வாங்கப்பு எங்கயிருந்துப்பு இப்படியெல்லாம் கிளம்பி வர்றீக.)

ee

மீரா மிதுன் தன்னைப் பற்றிய "போலீஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்'டை சமர்ப் பிக்காததால்தான் டிஸ்மிஸ் என டுபாக்கூர் ஆணையம் விளக்கம் வேற சொல்லிருக்கு. (அடக் கொடுமையே...கொடுமையே).

இதுகுறித்து விஜிலென்ஸ் டிபார்ட்மென்டில் பணிபுரியும் நமது நண்பரிடம் விசாரித் தபோது, ""அட ஏங்க நீங்க வேற. மனித உரிமைக் கமிஷன் மாநிலத் தலைவர், அகில இந்தியத் தலைவர், செயலாளர், மனித உரிமைக் கழகத்தின் தென்மண்டல செயல் தலைவர்னு ஆளாளுக்கு கார்ல கொடியக் கட்டிக்கிட்டு சுத்துவார்கள். அது எல்லாமே உடான்ஸ் கிடான்ஸ்தான். அது மாதிரி தான் இந்த ஊழல் தடுப்பு ஆணையமும்'' என உண்மையைப் போட்டு டைத்தார்.

cini140120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe