""இஷ்டம்னா "யெஸ்'-னும் இல்லைன்னா "நோ'-ன்னும் சொல்லிறனும். சினிமாவில் மூன்றுமாதம் வேலை செய்றோம். ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ ஆசை இருக்கத்தான் செய்யும். விருப்பம் இருந்தால் சம்மதிப்பதும், விருப் பம் இல்லைன்னா மறுப்பதும் அவரவர் இஷ்டம். கல்யாண மாகி 25 ஆண்டு வாழ்க் கைக்கு அப்புறமும் கணவன் அழைத்தால் மறுக்க உரிமை உண்டு. பலாத்காரம் அந்த சமயத்தி லும் ஆகாது'' என்கிறார் பூஜாகுமார்.

Advertisment

poojakumar

"உத்தம வில்லனி'-லும், "விஸ்வரூபம்' படத்திலும் கமலுடன் நெருக்கமாக நடித்தவர் பூஜாகுமார்.

Advertisment

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் அமெரிக்கா வுக்கும் இந்தியாவுக்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார். ராஜேஷ் டைரக்ஷனில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் பூஜா குமார் நடிக்கப்போவதாக செய்தி கசிந்தது. சென்னைக்கு வந்திருந்த அவர் பல விஷயங் கள் குறித்து பேசினார்.

vmala

""விக்ரமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவருடன் நடிப்பேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. தமிழில் இப்போது மூன்று படங்களில் நடிப்பது குறித்துப் பேச்சு நடக்கிறது. "விஸ்வரூபம்-2' படம் குறித்துக் கலவையான விமர்சனங்கள் வந்தன. அந்த இரண்டு படங்களிலும் நடித்தது எனக்குக் கிடைத்த வாய்ப்பு. கமல் சாருடன் நடிக்கும்போது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால், அவருடைய யூனிட்டில் இருக்கும்போது ஒரே குடும்பத்தில் இருப்பதுபோன்ற உணர்வு இருக்கும்.

Advertisment

"விஸ்வரூபம்- 2' படத்தின் விமர்சனங் கள் என்னை பாதிக்க வில்லை. அந்த விமர்ச னங்கள் பல்வேறு சிந்தனை உடையவர் களால் எழுதப்பட்டவை. ஆனால், "விஸ்வரூபம்- 2' படத்தை பலமுறை பார்த்தால் அது எல்லாருக்கும் பிடிக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு பிரேமும் முக்கியமானது. ஒரு பிரேமை கவனிக்கத் தவறினால் பல விஷயங்களைத் தவறவிட்டுவிடுவோம். நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். இப்போது இருநாடுகளுக்கும் இடையே பறந்து கொண்டிருப்பது சந்தோஷம் தான். இண்டர்நேஷனல் அளவில் இந்தியர் களுக்கு கூடுதல் வாய்ப்பு காத்திருக்கிறது.

poojakumar

தமிழ் சினிமாவிலிருந்து இசையையும் நடனத்தையும் பிரித்துவிட முடியாது. மீ டூ பிரச்சாரம் இப்போது சூடுபிடித்திருக் கிறது. எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்களை வெளிப் படையாகச் சொல்வது நல்லதுதான். அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் வேண்டும். சினிமா என்பதால் பகிரங்கப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் இது இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தங்களுக்கென்று ஒரு வேலை இருந்தால் வெளியேபோய் வளமாக வாழமுடியும்'' என்று வெளிப் படையாகவே பேசிய பூஜாகுமாருக்கு மாஜி நடிகை வைஜெயந்திமாலா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கொள்ளை ஆசையாம்.