Advertisment

ME TOO.. ""எல்லாமே கதைதான்'' -சொல்கிறார் ப்ரனிதி சோப்ரா!

/idhalgal/cinikkuttu/me-too-elalaamae-kataaitaana-caolakairaara-paranaitai-caoparaa

""மீ டூ பிரச்சாரத்தை நான் எதிர்க்கவில்லை. இது புதுசும் இல்லை. நிறையப்பேர் இனி கதை சொல்வார்கள். நடிகர்கள், டைரக்டர்கள், நடன இயக்குநர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள். நான் சார்ந்த சினிமா உலகில் இதுபோன்ற மோதல்களையும், அசவுகரியங்களையும் ஏற்படுத்தாமல் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். மீ டூ பிரச்சாரத்தில் சொல

""மீ டூ பிரச்சாரத்தை நான் எதிர்க்கவில்லை. இது புதுசும் இல்லை. நிறையப்பேர் இனி கதை சொல்வார்கள். நடிகர்கள், டைரக்டர்கள், நடன இயக்குநர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள். நான் சார்ந்த சினிமா உலகில் இதுபோன்ற மோதல்களையும், அசவுகரியங்களையும் ஏற்படுத்தாமல் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். மீ டூ பிரச்சாரத்தில் சொல்கிறவர்களுக்கு உடனடியாக நீதி கிடைத்துவிடுமா? இந்தியாவில் யாரேனும் பரபரப்பாக சொன்னால் இந்தியர்கள் காதுகொடுத்து கேட்பார்கள். பேசுவார்கள். பிறகு உடனே மறந்து விடுவார்கள். குறை கூறுகிறவர்கள் பொய் சொன்னால் அவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் ப்ரனிதி சோப்ரா.

Advertisment

பிரியங்கா சோப்ராவின் தங்கையான இவர், ""ஆண்- பெண் சமத்துவத்தை ஏற்கும் குடும்பத்திலிருந்து வந்ததால் யாரையும் தவறாக நினைக்கத் தோன்றவில்லை'' என்கிறார்.

Advertisment

metoometoo

ஆறுமாதங்களுக்குமுன் குண்டுகுண்டா இருந்த ப்ரனிதி சோப்ரா ஆறுமாதங்கள் காணாமல் போனார். திடீரென்று கவர்ச்சியான போட்டோக்களுடன் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னா...

""ஒருநாள் எனது போட்டோவைப் பார்த்தேன். அது அசிங்கமாக இருந்தது. எனக்கே வெட்கமாக இருந்தது. நமது உடலைக் கவனிக்காமல் இருந்திருக்கிறோமே என்று கவலையாக இருந்தது. வெளியில் என்னைப் பார்க்கும் சில குண்டுப் பெண்கள் நாங்களும் உங்களைப் போலத்தானே இருக்கிறோம் என்று கேலிபேசினார்கள். உடனே தனியாக ஒரு வீட்டை வாங்கி, அந்த வீட்டையும் எனது உடலையும் கவனிக்கத் தொடங்கினேன். இப்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி நான் ஒப்பந்தமான படங்களில் நடிப்பேன். இந்தியாவில் கதாநாயகி களுக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற சினிமாக்கள் வருவதில்லை. எப்போதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதுபோன்ற கதைகள் நமக்கு கிடைப்பதுமில்லை'' என்று பொரிந்து தள்ளுகிறார்.

cin301018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe