Advertisment

கோலிவுட் கோக்குமாக்கு மேட்டர்ஸ்! மேட்டர்-01

/idhalgal/cinikkuttu/matters-kollywood-kokuma-01-matter

ஜினியின் "லிங்கா', விஜய்யின் "கத்தி', "தர்பார்', இப்போது ஷூட்டிங் நடந்து வரும் கார்த்தியின் "சுல்தான்'... இவை யெல்லாம் கதை திருட்டுச் சமாச்சாரங்கள், பஞ்சாயத்துகள். ஆனால், கோலிவுட்டில் லேட்டஸ்டாக சொந்தப் படத்தையே, அதன் தயாரிப்பாளர் திருடிய கோக்குமாக்கு சமாச்சாரம் தான், இப்போதைய ஹாட் டாபிக்!

Advertisment

பல குறும்படங்களை டைரக்ட் பண்ணிய அனுபவத்துடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சதீஷ் கர்ணா. பலகட்ட முயற்சிகளுக்குப் பின், "கலை என்டர்டெய்ன்மென்ட்' என்னும் சினிமாக் கம்பென

ஜினியின் "லிங்கா', விஜய்யின் "கத்தி', "தர்பார்', இப்போது ஷூட்டிங் நடந்து வரும் கார்த்தியின் "சுல்தான்'... இவை யெல்லாம் கதை திருட்டுச் சமாச்சாரங்கள், பஞ்சாயத்துகள். ஆனால், கோலிவுட்டில் லேட்டஸ்டாக சொந்தப் படத்தையே, அதன் தயாரிப்பாளர் திருடிய கோக்குமாக்கு சமாச்சாரம் தான், இப்போதைய ஹாட் டாபிக்!

Advertisment

பல குறும்படங்களை டைரக்ட் பண்ணிய அனுபவத்துடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சதீஷ் கர்ணா. பலகட்ட முயற்சிகளுக்குப் பின், "கலை என்டர்டெய்ன்மென்ட்' என்னும் சினிமாக் கம்பெனியில் சதீஷ் கர்ணாவுக்கு டைரக்டர் சான்ஸ் கிடைத்தது.

Advertisment

kk

அந்தக் கம்பெனியின் முதலாளியான மனு பார்த்திபன் படத்தைத் தயாரிப்பதுடன், ஹீரோவாகவும் நடிப்பதென முடிவாகி "டைம் இல்ல' என்ற டைட்டிலுடன் 2018 ஜூன் மாதம் ஷூட்டிங் ஆரம்பமானது. சமீபத்தில் ரிலீசான "தோழர் வெங்கடேசன்' படத்தின் ஹீரோயினான மோனிகா சின்னகொட்லாதான் "டைம் இல்ல' படத்தின் ஹீரோயின். டைரக்டரான சதீஷ் கர்ணாவும் ஒரு கேரக்டரில் நடித்தார்.

மொத்தப் படமும் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங், விஎஃப்எக்ஸ் வேலைகளெல்லாம் முடிந்து, சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கி ரிலீசுக்கும் தயாரானது. தமிழ் சினிமாவில் டைரக்டராகப் பாகும் தனது கனவு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தார் சதீஷ் கர்ணா.

dad

இந்த நேரத்தில்தான் மனு பார்த்திபன், தனது சித்து வேலையை ஆரம்பித்தார்... படம் வியாபாரம் ஆவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, "தாதா-87' படத்தைத் தயாரித்த "கலை சினிமாஸ்' என்ற கம்பெனியின் தயாரிப்பாளரான கலைச்செல்வனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார்.

அந்த ஒப்பந்தப்படி, சதீஷ் கர்ணா நடித்த சீன்களை யெல்லாம் தூக்கிவிட்டு, மொட்டை ராஜேந்திரனை வைத்து காட்சிகளை ரீஷூட் செய்துமுடித் தார். சரி; இதெல்லாம் ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கும் உரிமை என சதீஷ் கர்ணாவும் மறுப்பு சொல்லவில்லை. இந்த இடத்தில்தான் ஒரு ட்விஸ்ட்!

கதை- திரைக்கதை- வசனம்- டைரக்ஷன் மனு பார்த்திபன் என போட்டு, மீண்டும் சென்சாருக்கு அனுப்பும் திருட்டுவேலையில் இறங்கியிருக்கிறார் மனு பார்த்திபன். இந்த விஷயத்தைக் கேட்டு ஷாக்கான சதீஷ் கர்ணா, சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி, "கில்டு 'தலைவர் ஜாக்குவார் தங்கம், கலை சினிமாஸ் கலைச்செல்வன், டைரக்டர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டி, நியாயம் வேண்டி மனுக்கள் அனுப்பினார்.

jj

அந்தப் படத்தில் பணிபுரிந்த கேமராமேன், எடிட்டர், டி.ஐ., மற்றும் வி.எஃப்.எக்ஸ் செய்யப்பட்ட லேபின் உரிமையாளர் என அனைவருமே சதீஷ் கர்ணாதான் படத்தின் டைரக்டர் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனால், மனு பார்த்திபனோ தான்தான் டைரக்டர் என முரண்டு பிடிக்கிறார்.

அடுத்தவர் உழைப்பைத் திருடி சாப்பிடுவதில் அப்படி என்ன ருசியோ?

-பரமு

cine200819
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe