Advertisment

மாஸ்டரின் மாஸ் மனசு

/idhalgal/cinikkuttu/masters-mass

"மாஸ்டர்' படத்தில் விஜய்யின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டது. ஒரு பாடல் காட்சியும், மாள விகா மோகனன், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட தனித்தனி சீன்கள் ஒன்றி ரண்டுதான் படமாக்கப்பட வேண்டியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் மொத்த ஷூட்ட

"மாஸ்டர்' படத்தில் விஜய்யின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டது. ஒரு பாடல் காட்சியும், மாள விகா மோகனன், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட தனித்தனி சீன்கள் ஒன்றி ரண்டுதான் படமாக்கப்பட வேண்டியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்து, போஸ்ட் புரொடக்ஷனை விறுவிறுப்பாக்கி, ஏப்ரல் விடுமுறையில் மாஸ்டரை திரையில் காண்பிக்க களம் இறங்கியிருக்கார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

Advertisment

vv

விஜய்- விஜய் சேதுபதி ஆகியோரின் பெரிய சம்பளம்தான் பட்ஜெட்டில் பெரிய தொகை. தனது சுறுசுறுப்பான டைரக்ஷ னாலும் நேர்மையான சிந்தையாலும் ஷூட்டிங் செலவுக்கான பட்ஜெட்டில் பாதி அளவு மிச்சமாக்கி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட் டோவை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளாராம் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

அட்லீ மாதிரி தண்டச் செலவு வைத்து, தயாரிப் பாளரை தாறுமாறாக புலம்ப வைக்காமல், ஷூட்டிங் செலவை சிக்கனமாக்கி, புத்திசாலித்தனமாக டைரக்ட் பண்ணிய லோகேஷ் கனகராஜை விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதனால், ""ரஜினி சார் படத்தை முடிச் சுட்டு வாங்க. அடுத்த படத் தையும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து பண்ணலாம்'' என லோ கேஷ் கனகராஜுக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார் விஜய்.

தனது போர்ஷன் முடிவ தையொட்டி, கடந்த வாரம் பட யூனிட் மொத்தத்திற்கும் அமர்க்களமான விருந்து கொடுத்து தனது மாஸ் மனசைக் காட்டியுள்ளார் விஜய்.

cini100320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe