காவியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் "ஜூலை காற்றில்.' இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணைத் தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி. சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.
படத்தின் இணை

படத்தின் இணைத் தயாரிப்பாளர் கருப்பையா தன்னுடைய வரவேற்புரையில், ""இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் நானும் 40 நாற்பதாண்டுகளுக்குமேல் நண்பர்கள். ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்குமுன்னர் நடைபெறும் வளைகாப்பு விழா போன்றது இந்த இசை வெளியீட்டு விழா. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பிறக்கவேண்டும் என்று வாழ்த்தி ஆசிசொல்வது போல், இந்தப் படமும் வெளியாகி நல்லதொரு வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காக ராசியான கைகளுக்குச் சொந்தக்காரரான கார்த்தியை அழைத்திருக்கி றோம்'' என்றார்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், ""இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொள்ள வில்லை. படத்தின் நாயகன், நாயகிகளும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பேச்சுகள் அடங்கிய யூ டியூப் சேனலைப் பார்த்து வியந்திருக்கிறேன். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என பஞ்ச் வைத்தார் ரவி.
இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் சகோதரி சித்ரா, கார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், ""செல்பி என்ற ஒரு விஷயத்திற்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார் கள். பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்தே போய்விட்டோம்'' என கொந்தளித்தார்.
இந்த விழாவில்தான் கார்த்தியுடன் செல்பி எடுத்து கலாய்த்து கலக்கினார் நடிகை கஸ்தூரி. பதிலுக்கு கடுப்பானார் கார்த்தி.