Advertisment

திருமணம் - குதூகலம்!

/idhalgal/cinikkuttu/marriage

ல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் "திருமணம்' என்னும் படத்தை இயக்கிவருகிறார் சேரன். ப்ரேனிஸ் இண்டர்நேஷனல் பேனரில் திருமணத்தை பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறார் மலேசியாவைச் சேர்ந்த பிரேம்நாத் சிதம்பரம். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான வெள்ளை சேது, தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளைக் கவனித்துவருகிறார்.

Advertisment

திருமணத்தின் முக்கி

ல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் "திருமணம்' என்னும் படத்தை இயக்கிவருகிறார் சேரன். ப்ரேனிஸ் இண்டர்நேஷனல் பேனரில் திருமணத்தை பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறார் மலேசியாவைச் சேர்ந்த பிரேம்நாத் சிதம்பரம். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான வெள்ளை சேது, தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளைக் கவனித்துவருகிறார்.

Advertisment

திருமணத்தின் முக்கிய கேரக்டரில் சேரன் நடிக்க, குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும் புதுமுகம் காவ்யா சுரேஷ் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோ பாலா, அனுபமா குமார். சீமா ஜி, பால சரவணன் நடிக்கிறார்கள்.

Advertisment

marriage

மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த சேரனின் தங்கையான காவ்யா சுரேஷுக்கும் ஹைகிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த சுகன்யாவின் தம்பி உமாபதி ராமையாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. பொருளாதாரரீதியில் ரொம்பவும் வித்தியாசம் உள்ள அந்த இரு குடும்பங்களுக்கிடையிலான சிக்கல் தீர்க்கப்பட்டு, திருமணம் எப்படி குதூகலமாக நடந்து முடிகிறது என்பதை தனக்கே உரிய தனித்துவத்துடன் சொல்லியிருக்கிறார் சேரன். தமிழ் சினிமாவில் டைரக்டர் சேரன், மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்கு அச்சாரம்தான் இந்த "திருமணம்.'

திருமணத்தின் ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், இசை சித்தார்த் விபின், எடிட்டிங் பொன்வேல், பாடல்கள் யுகபாரதி, லலிதானந்த், சேரன், டான்ஸ் மாஸ்டர்களாக சஜ்னா, பாலகுமார், அசோக் ராஜா ஆகியோர் அடங்கிய டெக்னீஷியன்கள் டீம் சேரனின் திருமணத்திற்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள்.

""இந்த திருமணம் பற்றி கடந்த "சினிக்கூத்து' இதழில் வெளியான செய்தியில் சொல்லியிருப்பதுபோல் எந்தக் குழப்பமும் இல்லை'' என படத்தின் பி.ஆர்.ஓ. நிகில் மூலமாக சேரனும் தயாரிப்பாளரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine120219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe