""காந்தின்னு பேர் வச்சா இயற்கையான சாவுக்கு இந்தியாவுல உத்தரவாதமில்லை. மோடின்னு பேர் வச்சா இந்தியாவுல இருக்குறதுக்கே உத்தரவாதமில்லை.'' இப்படி ஒரு நக்கல் வாட்ஸ்-அப் மெசேஜ் செம டிரெண்டிங் ஆச்சு. உயிருக்கு உத்தரவாத மில்லாதவர்கள் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. இந்தியாவில் இருப்பதற்கு உத்தரவாத மில்லாதவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, லலித்மோடி. நீரவ் மோடி.

Advertisment

priyankasonamkapoor

இதுல லலித் மோடிங்கிற சுமார் ரக கேடி, ஐ.பி.எல். பணம் 450 கோடி ரூபாயை ஆட்டையப் போட்டுட்டு லண்டனுக்கு எஸ்கேப்பானவர். அந்தக் கேடியைத் தேடு றாய்ங்க, தேடுறாய்ங்க 6 வருஷமா தேடுறாய்ங்க. அடுத்து நம்ம பி.எம்.மோடி, எந்தப் பண சீட்டிங்கும் பண்ணலைன்னாலும், ""என்னைய பிரதமர் ஆக்குனா, வெளிநாட்ல இந்தியத் தொழிலதிபர்கள் பதுக்கி இருக்குற மொத்த கருப்புப் பணத்தையும் அள்ளியாந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருத்தன் அக்கவுண்ட்லயும் 15 லட்ச ரூபாய் போடுவேன்.'' அப்படின்னு சொல்லி, 130 கோடி இந்திய மக்களையும் மனசீட்டிங் பண்ண பலே பாண்டியர்தான் நம்ம மோடி. நீரவ்மோடி. இந்த மோடிக்கும் சொந்த ஊரு குஜராத்துதான். ஆனா வளர்ந்த தெல்லாம் பெல்ஜியத்துல. பெரிய வைர வியாபாரி (எவன் வீட்டுக் காசுடா)யான இவருக்கு நியூயார்க், லண்டன், ஹாங்ஹாங், சீனான்னு ஏகப்பட்ட நாடுகள்ல டைமண்ட ஷோ ரூம் இருக்காம். 2016-ஆம் வருஷம் நடந்த ஆஸ்கர் அவார்டு வழங்கும் விழாவுக்கு வந்த பிரபல ஹாலிவுட் நடிகை, டைட்டானிக் பேமஸ் கேத்வின்ஸ்லெட் போட்டுக் கிட்டு வந்த வைர நெக்லஸ், இந்த மோடி கொடுத்ததுதானாம்.

Advertisment

kathirin

models

அப்புறம் நம்ம நாட்டு பேமஸான பிரியங்கா சோப்ரா, மோடியின் டைமண்ட் ஷோரூமின் பிராண்ட் அம்பாஸிடராம். அதுக்கப்புறம் அனுஷ்கா சர்மா, தீபிகாபடுகோன், லிசா ஹைடன், சோனம் கபூர், ஷ்ரத்தா கபூர், நிம்ரத் கவுர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இப்படி எல்லா ஹீரோயின்களும் மோடியின் டைமண்டை போட்டுக்கிட்டு மஜாவா இருந்த பார்ட்டிகள்தான்.

prreethisarathikapoor

இப்படியாப்பட்ட மெகா கேடியான மோடியின் லீலைகளுக்கெல்லாம் பேக் ரவுண்ட் என்னன்னு நினைக்கிறீங்க? மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில 11,500 கோடி ரூபாயை ஆட்டையப் போட்டுட்டு, நமக்கெல் லாம் பட்டையப் போட்டதுனால தான்.

Advertisment

jaqlin

பத்தாயிரம் ரூபாய்க்கு மாட்டு லோனோ, ஐயாயிரம் ரூபாய்க்கு ஆட்டு லோனோ வாங்குன நம்மள மாதிரி ஆளுக, ஒரு தவணை கட்டலைன்னா, எப்படியெல்லாம் கேவலப்படுத்துறாய்ங்க. ஆனா பாருங்க மக்களே ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அடிச்சுட்டு, ஃபாரீன்ல மஜாவா இருக்காய்ங்க படுபாவிப் பயலுக.

ஆப்கி மோடி சர்க்கார், நமக்கெல்லாம் நல்லா வேணும் சாப்.

-பரமேஷ்