Advertisment

மனோபாலா சீட்டிங் சேட்டை! அரவிந்த் சாமி-த்ரிஷா பஞ்சாயத்து!

/idhalgal/cinikkuttu/manobala-chalet-cheating-aravind-samy-trisha-panchayat

புதுமுக இயக்குநர் எச். வினோத் டைரக்ஷனில், நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து 2014-ல் ரிலீசான "சதுரங்க வேட்டை' படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா. படத்தைத் தயாரித்த மனோபாலா ரிலீஸ் பண்ணுவதில் ரொம்பவே திணறினார். பலபேரிடம் படத்தைப் போட்டுக் காட்டியும் ஹீரோ வேல்யூ, டைரக்டர் வேல்யூ இல்லாததால் படத்தை வாங்க யாரும் முன்வர வில்லை. படத்தைப் பார்த்த டைரக்டர் லிங்குசாமி மட்டும், கதைமேல் உள்ள நம்பிக்கையில் படத்தை வாங்கி, தனது திருப்பதி பிரதர்ஸ் பேனர்மூலம் ரிலீஸ் பண்ணினார். படமும் ஜெயித்தது, லிங்குசாமியின் நம்பிக்கையும் ஜெயித்தது, வசூலை வாரிக் குவித்தது. மனோபாலாவுக்கு மிகப் பெரிய தொகையைக் கொடுத்த

புதுமுக இயக்குநர் எச். வினோத் டைரக்ஷனில், நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து 2014-ல் ரிலீசான "சதுரங்க வேட்டை' படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா. படத்தைத் தயாரித்த மனோபாலா ரிலீஸ் பண்ணுவதில் ரொம்பவே திணறினார். பலபேரிடம் படத்தைப் போட்டுக் காட்டியும் ஹீரோ வேல்யூ, டைரக்டர் வேல்யூ இல்லாததால் படத்தை வாங்க யாரும் முன்வர வில்லை. படத்தைப் பார்த்த டைரக்டர் லிங்குசாமி மட்டும், கதைமேல் உள்ள நம்பிக்கையில் படத்தை வாங்கி, தனது திருப்பதி பிரதர்ஸ் பேனர்மூலம் ரிலீஸ் பண்ணினார். படமும் ஜெயித்தது, லிங்குசாமியின் நம்பிக்கையும் ஜெயித்தது, வசூலை வாரிக் குவித்தது. மனோபாலாவுக்கு மிகப் பெரிய தொகையைக் கொடுத்து குஷிப்படுத்தினார் லிங்குசாமி.

Advertisment

mmm

அதன்பின் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் பிஸியானார் மனோபாலா. 2016-ஆம் ஆண்டு அரவிந்த்சாமி- த்ரிஷா காம்பினேஷனில் "சதுரங்க வேட்டை-2' -வை ஆரம்பித்தார். இருவருக்கும் ஒரு தொகையை அட் வான்சாக கொடுத் தார். ""இந்தப் படத்திற்கு வசனம் மட்டும் எழுதுகிறேன், நிர்மல்குமார் டைரக்ட் பண்ணி னால் நன்றாக இருக்கும்'' என எச்.வினோத் சொன்னதால், மனோபாலாவும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

Advertisment

எட்டரைக் கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை முடித்து ஒப்படைப்பதாகச் சொல்லி விநியோகஸ்தர் கங்காதரனிடம் ஒப்பந்தம் போட்டார் மனோ பாலா. இந்த ஒப்பந்தத்தின் அடிப் படையில் மூன்றரைக் கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் கங்காதரன். "சதுரங்க வேட்டை-2' ஷூட்டிங்கும் ஆரம்பமானது, மனோபாலாவின் சீட்டிங் வேட்டையும் ஆரம்பமானது. பாதிப் படம் முடிந்த நிலையில், மூன்று ஃபைனான்சியர்களை தனித்தனியாக சந்தித்த மனோ பாலா, ""படத்தை உங்களுக்குத் தருகிறேன்'' எனச் சொல்லி ஒருவரிடம் 4 கோடி ரூபாயும் மற்ற இருவரிடம் தலா 2 கோடி ரூபாயும் வசூல் பண்ணிவிட்டார். படம் தங்களுக்குத்தான் என மூணு பேருமே நம்பிக் கொண்டி ருந்தனர்.

ஆனால், மனோபாலாவோ கில்லாடித்தனமாக வேறொரு வேலை பண்ணினார்.

ஃபைனான்ஸ் டைட்டால் ஷூட்டிங் லேட்டாகாது எனச் சொல்லி மீண்டும் கங்காதர னிடம் ஒன்றரைக் கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். "சீக்கிரம் படத்தை முடிச்சுக் கொடுங்க' என கறார் காட்டினார் கங்காதரன்.

""கால்வாசி ஷூட்டிங்தான் இருக்கு, அதுக்குப் பிறகு போஸ்ட் புரொடக்ஷன்தான். டோண்ட் ஒர்ரி, பி ஹேப்பி'' என்றிருக்கிறார் மனோபாலா. ஒரு நாள் எதேச்சையாக கங்காதரனும், அந்த மூன்று ஃபைனான்சியர்களும் சந்தித்த போது, "சதுரங்க வேட்டை-2' வை எங்களுக்குத் தருவதா மனோ பாலா சொல்லிருக்காரு'' என தனித்தனியாக கங்காதரனிடம் சொன்னதும் அதிர்ச்சியாகி விட்டார் கங்காதரன். ""என்னயா அக்கிரமமா இருக்கு, எட்டரைக் கோடிக்கு பேசி, அஞ்சு கோடி ரூபாய் நான் கொடுத்திருக்கேன். "சதுரங்க வேட்டை'யை நம்ம கிட்டயே காட்றாரா மனோ பாலா?'' என கடுப்பாகியிருக்கிறார் கங்காதரன். இதற்கிடையே அந்த மூன்று பேரில், இரண்டு பேரைக் கழட்டிவிடும் ஐடியாவுடன், ஒருவரை மட்டும் தனியே சந்தித்திருக்கிறார் மனோபாலா.

mmm

இவையெல்லாம் தெரிந்த கங்காதரன், இப்போது மனோ பாலாமீது செம காட்டமாக இருக்கிறார்.

அந்தக் கதை அப்படியென் றால், ஹீரோ அரவிந்த்சாமிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளப்பாக்கி வைத்திருப்பதால், மனோபாலா கெஞ்சிக் கதறியும் டப்பிங் பேச மறுத்துவிட்டாராம் அரவிந்த் சாமி. இதே போல், ஹீரோயின் த்ரிஷாவுக்கு 30 லட்சம் சம்பளப் பாக்கி இருப்பதால், நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்தை கூட்டப் போகிறாராம் இதுபோக, படத்தின் டைரக்டர் நிர்மல்குமார் உட்பட அனைத்து டெக்னீஷியன் களுக்கும் ஏகப்பட்டரூபாய் சம்பளப் பாக்கி வைத்துள்ளாராம் மனோபாலா.

மனோபாலாவின் இப்படிப் பட்ட சீட்டிங் சேட்டைகளால் மூன்று வருடங்களாகியும் முடியாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது "சதுரங்க வேட்டை-2.' சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா.

cine110619
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe