manusha

H3 சினிமாஸ் நிறுவனத் தயாரிப்பில் கஸாலிகதை, திரைக் கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் "மனுசனா நீ.'

manushaபிப்ரவரி வெளியீடாக வரவுள்ள "மனுசனா நீ' படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. "மனுசனா நீ' படத்தின் போஸ்டரைப் பார்ப் பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலிலும், துறை யிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய மருத்துவத்துறை மாஃபியாக்களைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது "மனுசனா நீ.'

துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும் போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களை யும் சந்தித்தார். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன், வெளியீடு என எல்லாத் துறைகளிலுள்ள பிரச்சினைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்கவைத்தது. தமிழ் சினிமாவில், தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களைவிட வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்ட கஸாலி, H3 சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாக பிரச்சினையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக்கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குத் தேவையான ஸ்டூடியோ நிர்மாணிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. "மனுசனா நீ'-யின் ஹீரோவாக சலீம், ஹீரோயினாக மலேசியா வைச் சேர்ந்த மனிஷா கவுர், ரிமலா பாலா மற்றும் சுப்பு பஞ்சு, அனு கிருஷ்ணா நடித்துள்ளனர். ""H3-ன்னா என்னன்னு கஸாலியிடம் கேட்டதுக்கு, ""தயாரிப்பு, போஸ்ட் புரொக்ஷன், ரிலீஸ் இந்த மூணுக்கும் ஹெல்ப் பண்றதுதான் H3''-ன்னு நச்சுன்னு சொன்னாரு.

Advertisment