Advertisment

மலையாளக் கரையோரம்... (கேரள ஹீரோயின்களைப் பற்றிய செய்திக் குறிப்பு)

/idhalgal/cinikkuttu/malayalam-shore-news-about-kerala-heroines

நித்யா மேனன்

dddதன் நடிப்புத் திறமை யால் வெகுவாக கவனம் ஈர்த்த நடிகை நித்யா மேனன், சமீபகாலமாக படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். "அவர் திமிர் பிடித்தவர், அதனால்தான் படங்களில் நடிக்க மறுக்கிறார்' என்று தயாரிப்பாளர்கள் தரப்பு குற்றம்சாட்டிய நிலையில், படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது தாயாரைக் கவனிக்கவே படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

Advertisment

தற்போது அவர் நடித்து வெளியாகிய பாலிவுட் படம் "மிஷன் மங்கல்' நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்துவருகிறார் நித்யா மேனன்.

அந்தவகையில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நித்யா. "ஆரம் திருகல்பனா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட க்ரைம் திரில்லரான "ஆரம் திருகல்பனா' நித்யா மேனனின் 50-ஆவது திரைப்படமும்கூட.

காயத்ரி சுரேஷ்

மற்றவர்கள் தயங்கிக் கொண்டிருந்த வேளையில், "மலையாளத் திரையுலகிலும் படவாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் கொடுமை நடக்கிறது' என்று பகிரங்கமாக சொன்னவர் நடிகை பார்வதி.

Advertisment

ggg

அதை ஒரு கடமையாகச் செய்யச் சொல்வதாகவும் கூறியிருந்தார். அவருக்குப் பிறகு பலரும் மனம்திறந்த நிலையில், மலையாளத் திரையுலகின் இளம் நடிகை காயத்ரி சுரேஷ் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவம் பற்றியும் பேசியிருந்தார்.

"ரெட் எஃப்.எம்.' ரேடியோ நிகழ்ச்சியில், ஒரு பட புரமோஷனுக்காகக் கலந்துகொண்ட காயத்ரி, ""என்னை முதலில் அதற்காக அப்ரோச் செய்தார்கள். பிறகு செல்போன் மெசேஜ்மூலம், அதற்கு தயாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தயாரிப்பாளர் கள் சிலர் இதுபோல செய்வது என்னை எரிச்சல்படுத்திய காரணத்தால் நான் அவர்களுக்கு ரிப்ளை செய்வதைத் தவிர்த்து விட்டேன். பின் எப்போதும் பேசியதில்லை'' என்று அதிர்ச்சியூட்டினார். 2014-ஆம் ஆண்டு "மிஸ் கேரளா' பட்டம் வென்ற காயத்ரி தமிழில் அறிமுகமாகி இருக்கும் "4ஜி' படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார்.

ப்ரியா பிரகாஷ் வாரியர்

ஒரேயொரு புருவ அசைவில் உலக ட்ரெண்டிங் கைப் பிடித்தவர் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். gggஅந்தக்காட்சி இடம்பெற்ற ஒரு "அடார் லவ்' படம் ஃப்ளாப் ஆனாலும் ப்ரியாவுக்கான ரசிகர் கூட்டம் குறையவில்லை. இந்தப் படத்தை முடித்த கையோடு பாலிவுட்டில் நடித்த ஸ்ரீதேவி படமும் யார் கவனத்தையும் பெறவில்லை. இப்போது, சாண்டல்வுட்டில் நுழைந்திருக்கிறார் ப்ரியா.

"விஷ்ணு ப்ரியா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ப்ரியா தன்னிடம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் செம ஸ்மார்ட்டாக பதில் சொல்லி அசத்தினார். "உங்களுக்கு யஷ் அல்லது புனீத் ராஜ்குமார் இருவரில் யாருடன் நடிக்க விருப்பம்' என்று கேட்டபோது, ""யாரையாவது குறிப்பிட்டுச் சொல்லி வரும் வாய்ப்புகளைக் கைவிட விரும்பவில்லை. எல்லாருடனும் நடிப்பேன். கதைதான் முக்கியம்'' என்றார்.. மேலும், ""அந்த புருவ அசைவை மட்டுமே வைத்து என்னை அடையாளம் காணவேண்டாம். கண்கள்தான் உணர்ச்சிகளைக் கடத்த ஒப்பற்ற வழி என்பதை நம்புகிறேன். புருவத்தை மட்டுமே கவனித்தால் எப்படி? இன்னும் நிறைய நடிக்க விரும்புகிறேன்'' என்றும் பேசியுள்ளார். "விஷ்ணு ப்ரியா' படத்தில் ஸ்ரேயாஸ் மஞ்சு நாயகனாக அறிமுகமாகிறார்.

மாளவிகா மோகனன்

ggg

"பேட்ட படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த அக்மார்க் மலையாளப் பெண் என்றாலும், பாலிவுட் பட வாய்ப்புக்காக மும்பையிலேயே தஞ்சமடைந்திருக்கிறார் இவர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிக்கும் "ஹீரோ' படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்குப்பிறகு, கிடப்பில் போடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு அவுட்புட் வராததே அதற்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் அக்டோபர் மாதம் ரிலீஸாக வேண்டிய படம் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கே நகராமல் இருக்கிறது. ஆனால் விஜய் தேவாரகொண்ட வேறொரு படத்தில் பிஸியாக இருப்பதே அதற்குக் காரணம் என்று மாளவிகாவின் தரப்பில் விளக்கம் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் மும்பையில் நடந்த "லேக் மீ' விழாவில் கவர்ச்சி தூக்கலாக உடையணிந்து ரேம்ப்-வாக் நடந்த மாளவிகா, பல தயாரிப்பாளர்களின் கண்களைப் பறித்திருக்கிறாராம். இதன்மூலம் "ஹீரோ' படத்தில் ஏற்பட்ட பாலிவுட் என்ட்ரி தாமதத்தை வேறொரு படத்தின்மூலம் ஈடுகட்ட மாளவிகா திட்டமிட்டிருக்கிறாராம்.

லிஜோமோல் ஜோஸ்

joee

மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறார். துபாயில் இருக்கும் மலையாளத் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற தகவலும் உண்டு. சமீபத்தில் ரிலீசாகியிருக்கும் சசியின் "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக அறிமுகமாகி நடிப்பிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார். இனிமேல் தமிழ் சினிமாவில் ஸ்ட்ராங்காக கால்பதிப்பது என்ற முடிவுடன் சில முடிவுகளை எடுத்துருக்காராம் லிஜோமோல் ஜோஸ்.

cini240919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe