சென்னை வடபழனியில் இருக்கும் பாரம்பரியம்மிக்க ஏ.வி.எம். ஸ்டுடியோவை தெரிந்து வைத்திருந்தால்போதும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என சொல்லிக்கொண்டு, சாலிகிராமம், வளசரவாக்கம் ஏரியாக்களில் நூற்றுக்கணக்கில் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

cc

மேற்கண்ட ஏரியாக்களில் ஆபீஸ் போடவேண்டியது, "அவனக் காணோம்', "நான் சொன்னா நீ கேப்பியா', "ஏம்மா இப்படி பண்ற', "அவ மட்டும்தான் எனக்கு வேணும்'... இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி டைட்டிலை வைத்து, ஆபீஸ் வாசலில் ஃப்ளக்ஸ் போர்டு வைக்கவேண்டியது. இதைப் பார்த்து சான்ஸ் கேட்டுவரும் வாலிபர்களை ஒரே அமுக்காக அமுக்கி, ""பாஸு நீங்கதான் ஹீரோ! ஒரு ரூபாய (ஒரு லட்சம்) ரெடி பண்ணுங்க, உங்க ஊர்லயே ஷுட்டிங் வச்சு தூள் கிளப்பிடலாம்'' என பிட்டைப் போடுவார்கள். ரூபாய் கைக்கு வந்ததும் அந்த மாதத்தை ஓட்டிவிடுவார்கள்.

Advertisment

ஹீரோயின் சான்ஸ் கேட்டுவரும் இளம்பெண்களை ஒரு கட்டத்தில் வேறு ரூட்டுக்குத் தயார்படுத்திவிடுவார்கள்.

அதேபோல் சொன்னபடியே சில நாட்கள், அந்த இளைஞனின் ஊரில் ஷூட்டிங்கும் நடத்துவார்கள். அத்தோடு சரி- கம்பெனியை இழுத்து மூடிவிடுவார்கள். இப்படிப்பட்ட டுபாக்கூர் டைரக்டர்களின் முதலீடே கையடக்க கேமராதான்.

ccc

Advertisment

நாம் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் ஒரு நண்பரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தோம். பார்த்து விட்டுத் திரும்பிவரும்போது, ஒரு வீட்டின் முகப்பில் "நயன்தாரா நற்பணி மன்றம்' என்ற போர்டு இருந்தது. "இங்க பார்ரா... நயன்தாராவுக்கு நற்பணி மன்றம் வச்சிருக்காய்ங்க!'ன்னு நண்பரிடம் சொன்னபோது, ""அட நீங்க வேற- அது ஒரு படத்தின் டைட்டிலுங்க'' என்றார். அந்த ஆபீஸ் இப்ப இருக்கோ என்னவோ தெரியல.

இப்படி ஆபீஸ் போட்டு படம் எடுப்பதைவிட, பணம் பறிக்கும் கும்பல்களும், விபச்சார நெட் ஒர்க் கும்பல்களும் வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம் ஏரியாக்களில் பெருகி வருகின்றன. 300-க்கும் மேற்பட்ட டுபாக்கூர் ஆபீஸ்கள் இந்த ஏரியாக்களில் உள்ளன. தயாரிப்பாளர்கள் கவுன்சிலும், டைரக்டர்கள் சங்கமும் இதைக்கண்டு கொள்ளாதவரை, ஆபத்துதான்!