ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில், பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் "தேனாம்பேட்டை மகேஷ்.' இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம். சித்திக்.
"அங்காடித் தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக "பிச்சுவாகத்தி' அனிஷா நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/makesh.jpg)
படம் குறித்து இயக்குநர் எம். சித்திக் கூறும்போது, ""எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கிறார் இவரது தந்தை.
ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன் இப்படத்தில் மகேஷ், வாட்டர் கேன் சப்ளைசெய்யும் வாலிபராகவும், பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்'' என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு - முனீஷ், இசை- ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர்- பாசில், கலை - கார்த்திக், நடனம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை பயிற்சி- எஸ்.ஆர். முருகன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/makesh-t.jpg)