Advertisment
/idhalgal/cinikkuttu/mafia

ருண் விஜய் நடிப்பில், "துருவங்கள் பதினாறு' புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் "மாஃபியா- பாகம் 1'. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் நம்மிடம் பேசும்போது,

ருண் விஜய் நடிப்பில், "துருவங்கள் பதினாறு' புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் "மாஃபியா- பாகம் 1'. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் நம்மிடம் பேசும்போது, ""என்னோட 3-ஆவது படம் இது. போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதைதான் இந்தப்படம். இப்படம் நான்- லீனியர் முறையில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா நடிச்சிருக்கார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ணமுடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது.

Advertisment

mafia

இரண்டு வேறுவேறு குணங்கள்கொண்ட கதாபாத்திரங்கள் இடையே நடக்கிற போர்தான் இந்தப் படத்தின் மையக்கதை. பிரசன்னாவின் கேரக்டர் இந்தப் படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. ஆனா நடிப்பில் கலக்கி யிருக்கிறார். பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியா வருகிறார். அவருக்கு முன்னாடி வேற ஹீரோயின்களும் பார்த்தோம். ஆனா இந்தக் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமா இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவரை தேர்ந் தெடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். இந்த ரோல் அவருக்கு புது மாதிரியா இருக்கும். பட வேலைகள் மொத்தமாக முடிந்துவிட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகிறது'' என்றார்.

cini180220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe