கல மொழி சினிமாவிலும் சான்ஸுக்காக தயாரிப்பாளருடனோ, இயக்குனருடனோ ஹீரோயின்கள் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது கட்டாயமாகிவிட்டது. இத நாம சொல்லல, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹாலிவுட் ஹீரோயின்களே சொல்வதுதான் இது. ஆந்திராவின் ஸ்ரீரெட்டி ஆரம்பிச்சு வச்சாலும் வச்சாரு, அங்கங்க பத்திக்கிட்டு எரியுது படுக்கை அறை சமாச்சாரங்கள்.

richa

இந்தி சினிமாவின் அந்தக் காலத்து பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான். சினிமாவிலிருந்து ரிடையர்டாகிவிட்ட இந்த அம்மணி, ""படுக்குறதால் சான்ஸ் கிடைக்குதுன்னா படுக்குறதுல தப்பேயில்ல. ஹீரோயின்கள பயன்படுத்திக்கிட்டு சான்ஸ் கொடுக்காம போனாத்தான் தப்பு. எத்தனையோ ஹீரோயின்கள் சான்ஸுக்காக படுத்த கதையெல்லாம் எனக்குத் தெரியும்'' என உள்ள நிலவரத்தை உள்ளதுபடியே சொல்லி புல்லரிக்க வைத்திருக்கிறார்.

""ஆமா சரோஜ்கான் சொன்னது சரிதான்'' என சப்போர்ட் பண்ணுகிறார் நம்ம ஊரு ஷகிலாவாக இந்தியில் நடிக்கும் ரிச்சா தத்தா.