Advertisment
/idhalgal/cinikkuttu/love

47-ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி, அஞ்சலி நடித்த "பேரன்பு' திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187

47-ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி, அஞ்சலி நடித்த "பேரன்பு' திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் "பேரன்பு' முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது.

Advertisment

love

தற்போது "பேரன்பு' திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக "பேரன்பு' திரையிடப்பட இருக்கிறது.

பேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளி வர இருக்கிறது.

"உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் பேரன்பு மிக்க நன்றி.' என்கிறார்கள் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், டைரக்டர் ராம் ஆகியோர்.

இதையும் படியுங்கள்
Subscribe