நடிகர் அருண் விஜய் சமீபமாக வெகு வித்தியாச மான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துவரு கிறார். 2020-ஆம் ஆண்டில் பல படங்களில் வரிசையாக நடித்துவருகிறார். இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத் தியுள்ள "மாஃபியா' படம் பிப்ரவரி 21 ரிலீஸுக்குத் தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனி யுடன் இணைந்து நடிக்கும் "அக்னி சிறகுகள்' படம் முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் "சினம்' படத் தின் மூன்றாம் கட்ட படப் பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இதுகுறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது...
""இந்த 2020-ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள் ளது. ரசிகர்களின் அன்பும், பேராதரவும் மட்டுமல்லாமல், எனது வரப்போகும் படங் களின்மீது அவர்கள் காட்டும் பேரார்வம் என்னை மகிழ்ச்சி யில் திக்குமுக்காடச் செய்துள்ளது. அவர்களின் அன்பு இன்னும் கடுமையாக உழைக்க எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. "சினம்' திரைப்படம் திரில்லர் ஆக்ஷன் விரும்பிகளுக்குப் பெருவிருந்தாக இருக்கும் கதை சொல்லும் விதத்திலும் கதாபாத்திரங்களை வடிவமைப் பதிலும் இயக்குநர் குமரவேலன் வித்தகராக இருக்கிறார்,'' என்றார்.
"மூவி ஸ்லைட்ஸ்' சார்பில் ஆர். விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். "சினம்' படத்தில் பாலக் லால்வானி நாய கியாக நடிக்கிறார். பாடல்கள் எழுதுகிறார்கள்.