"தலைவா' படத்தில் விஜய் யுடன் ஜோடிபோட்டார் அமலாபால். "தெய்வத் திருமகள்' படத்தில் விக்ரமுடன் நடித்தார் அமலாபால். இந்த இரண்டு படங்களையுமே டைரக்ட் பண்ணியவர் ஏ.எல். விஜய். இரு படங்களில் இருவரும் சேர்ந்ததால், மனமும் இணைந்து காதலில் தீவிரமாகி திருமணம்வரை போனது.

Advertisment

alvijay

"அமலாபால் வேண்டாம், குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது' என விஜய்யின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் விஜய்யோ ""கட்னா அமலாபாலைக் கட்டுவேன்.

Advertisment

இல்லேன்னா என்னை நானே வெட்டிக்குவேன்'' என்ற ரேஞ்சுக்கு வெறித்தனமாக இருந்ததால், வேறுவழியே இல்லாமல், இருவரின் கல்யாணத்துக்கு சம்மதித்தார் அழகப்பன்.

ஒரு சுபயோக சுபதினத் தில் இருவரின் திருமணமும் இனிதே நடந்தது. ரோம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர் புதுமணத் தம்பதிகள். சில மாதங்கள் சிரிப்பும் இனிப்புமாக ஓடியது இல்லற வாழ்க்கை.

Advertisment

அதன்பின் அமலாபாலின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாற்றம். மீண்டும் சினிமாவில் நடித்து நாலு காசு சம்பாதிக்கும்படி தூபம் போட்டார் அமலாபாலின் அம்மா. இதுபோக கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் கிறங்கிப் போனார் அமலாபால்.

tamanaalvijay

இல்லற வாழ்வில் விரிசல் விழுந்தது. விவாகரத்துவரை சென்றது. விவாகரத்துக்குப் பின்னும் அமலாபாலின் நினைப்பிலேயே இருந்தார் விஜய். மகனுக்கு மறுமணம் முடிக்க அழகப்பன் யோசித்தபோதெல்லாம் பிடிகொடுக்கவில்லை விஜய்.

saipalavi

சில நண்பர்கள்மூலம் அமலாபாலுக்கு தூதுவிட்டுப் பார்த்தும் பலனில்லை. தமிழ், மலையாள சினிமாவில் பிஸியானார் அமலாபால். விஜய்யிடம் மனமாற்றம் பிறந்தது. தான் டைரக்ட் பண்ணிய "தேவி' படத்தின் ஹீரோயின் தமன்னாவுக்கு நூல்விட்டுப் பார்த்தார், அது அறுந்து போயிருச்சு. விடாது விஜய்யோ, தனது டைரக்ஷனில் சமீபத்தில் ரிலீசான "கரு' படத் தின் ஹீரோயின் சாய் பல்லவி மீது காதல் கொண்டார். இந்தக் காதல் இப்போது ஒர்க்- அவுட் ஆகிவிட்டதாகவும் அதன்பலனாக சாய் பல்லவிக்கு 30 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கிக் கொடுத் திருப்பதாகவும் கோலிவுட் பட்சி ஒன்று நம்மிடம் சொன்னதை "சினிக்கூத்து' வாசகர்களுக்கு தீபாவளி இனிப்பாக வழங்குகிறோம்.

-பரமு