Advertisment
/idhalgal/cinikkuttu/lost-6-hours

லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித் திருக்கும் படம் "லாஸ்ட் 6 ஹவர்ஸ்.' பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், தயாரிப்பாளர் அனூப் கால

லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித் திருக்கும் படம் "லாஸ்ட் 6 ஹவர்ஸ்.' பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

bb

கைலாஷ் மேனன் இசை யமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனி டம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் இப்படத் தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்குபேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக் கிறார்கள். அதன்படி நான்கு பேரும் ஆறு மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின் றன. அந்த சம்பவங்கள் என்னென்ன? திருடச் சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதை பல திருப்பங் களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.

"இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார்' என்றும் இயக்குநர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

cini170320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe