Advertisment

வாழ விடுங்கய்யா -புலம்பும் ஹீரோ!

/idhalgal/cinikkuttu/live-live

ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பாளர் மன்னு தயாரித் திருக்கும் திரைப்படம் "செய்.' இந்தப் படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக் கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரா

ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பாளர் மன்னு தயாரித் திருக்கும் திரைப்படம் "செய்.' இந்தப் படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக் கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு.

Advertisment

nagul

"இந்தப் படத்தை நவம்பர் 16-ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்தப் படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தோம். அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தோம்.

அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ் செய்தி கிடைத்தது. அதில் ""செய்' திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில்தான் வெளியாகும்' என்றிருந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தோம்.

தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

Advertisment

எனவே, யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16-ஆம் தேதியை ஒப்புக் கொண்டோம்.

அந்த தேதியில் விஜய் ஆன்டனி நடித்த "திமிரு புடிச்சவன்' என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் மேலும் அதிர்ச்சியடைந் தோம். திட்டமிட்டபடி, "செய்' 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மனஉளைச்சலுக்கு ஆளாகி யிருந்தோம்.''

-இப்படியெல்லாம் ரிலீசுக்கு முதல் நாள்வரை நொந்து புலம்பிக் கொண்டி ருந்தார் படத்தின் ஹீரோ நகுல்.

"செய்' படத்தை வச்சு செஞ்சுட் டாய்ங்க!

cine271118
இதையும் படியுங்கள்
Subscribe