Advertisment

லிப்-லாக் டென்ஷன் -நிகிலா விமல் குளிர்ச்சிப் பேட்டி!

/idhalgal/cinikkuttu/lip-lock-tension-nigella-wimals-interview

டிகை நிகிலா விமல் "தம்பி' படத்தில் நடித்த அனுபவங்களைப் சொல்கிறார்...

""ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது.

nn

ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

Advertisment

சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். இப்போது "தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் சம்மதம் தெரிவித்தேன். எல்லாரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றமாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் "தமிழில் ஒரு படம் இயக்குகிறேன். கார்த்தியின் ஜோடி யாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

Advertisment

கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும்தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா?' என்றார். அவர் நேர்மையாகக் கூறியதும் நான் ஒப்புக்கொண்டேன். மேலும், தொழி

டிகை நிகிலா விமல் "தம்பி' படத்தில் நடித்த அனுபவங்களைப் சொல்கிறார்...

""ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது.

nn

ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

Advertisment

சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். இப்போது "தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் சம்மதம் தெரிவித்தேன். எல்லாரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றமாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் "தமிழில் ஒரு படம் இயக்குகிறேன். கார்த்தியின் ஜோடி யாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

Advertisment

கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும்தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா?' என்றார். அவர் நேர்மையாகக் கூறியதும் நான் ஒப்புக்கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை.

காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன். அதுவரை காத்திருப்பேன்.

"கிடாரி'-க்குப்பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது. அந்தப் படம் வெற்றிபெற்றவுடன் தொடர்ந்து அதிகப்படங்கள் அங்கேயே நடிக்கும்படியான சந்தர்ப்பம் அமைந்தது. "தம்பி' படம்மூலம் தமிழில் இது மறுபிரவேசம் என்றுகூட சொல்லலாம்.

எனக்குத் தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது.

nn

சில நடிகர்களுக்கு ஒரே பாணியிலான படங்கள், அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்துவிடும்.

ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்கக்கூடிய திறமைவாய்ந்தவர். தனக் கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தா லும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந் தாலும், இல்லை இரண்டும் கலந்திருந்தாலும் அவர் திறமை யாக நடித்து வெளிப்படுத்துவார். இதுபோன்ற நடிகருடன் நினைப் பதை பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால்போதும் என்று நினைக் கக்கூடிய கலைஞர் கிடையாது.

தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டுமென்ற எண்ணக்கூடிய மனிதர்தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும் போது, படப்பிடிப்புத் தளத்தில் அலங்காரம் செய்துகொண்டி ருப்பார். அப்போது நான், "உங்களைப் பார்த்துக்கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா?' என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இதுபோன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல்முறை.

எல்லாரையும்போல் ஜோதிகாவை நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிகமென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரிசமமான முக்கியத்துவம் தரவேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

nn

படப்பிடிப்புத் தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருவருக்கொருவர் கிண்டல டித்துக்கொள்வோம். சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் கலகலப் பாகப் பேசுவோம். சிறந்த அனு பவம் அது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில், சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள்தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலைவரும். ஆனால், இந்தப் படத்தில், எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல்தான். அதுவும் உதட் டோடு பதிக்கும் முத்தக்காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார்.

இந்தப் படத்திற்குப் பிறகு தொடர் தமிழ்ப் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்'' என குற்றாலச்சாரல்போல குளிர்ச்சி யாகப் பேசினார்.

cini311219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe